காஞ்சிபுரத்தில் கபடி வீரர் இரும்புக்கம்பியால் அடித்து படுகொலை
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே கபடி வீரரை இரும்பு கம்பியால் அடித்து படுகொலை செய்த 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் அருகேயுள்ள முசரவாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் ஜெகநாதன் (28) கபடி விளையாட்டு வீரர். காஞ்சிபுரம் மாவட்டம் சார்பில் பிற மாவட்டங்களில் நடைபெறும் கபடி போட்டிகளில் ஜெகநாதன் பங்கேற்று விளையாடி வந்தார்.

இந்நிலையில், கடந்த 19ம் தேதி முசரவாக்கம் காலனி சேர்ந்த ராஜபதி மற்றும் அவரது நண்பர்கள் சிலர் ஜெகநாதனோடு சேர்ந்து மது குடித்துள்ளனர். அப்போது போதையில் ராஜபதிக்கும், ஜெகநாதனுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த ராஜபதி அருகில் கிடந்த இரும்பு கம்பியை எடுத்து ஜெகநாதன் தலையில் தாக்கினார். தொடர்ந்து ராஜபதியின் நண்பர்களும் ஜெகநாதனை சரமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினர்.
இதையடுத்து ஜெகநாதன் தொலைபேசியில் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார். தகவலின்படி உறவினர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பின்னர், ரத்த வெள்ளத்தில் கிடந்த ஜெகநாதனை மீட்டு சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், மேல்சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசுமருத்துவமனைக்கும், அங்கிருந்து சென்னை அரசு மருத்துவமனைக்கும் மாற்றப்பட்டார். இந்நிலையில், நேற்று இரவு 8 மணி அளவில் சிகிச்சை பலனின்றி ஜெகநாதன் உயிரிழந்தார்.
இது குறித்து பாலுசெட்டி சத்திரம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள 5 பேரையும் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications