கபாலி சாதனை படம், ஆவரேஜ், தாங்காது, நல்லா இருக்கு: ஒன்இந்தியா வாசகர்கள் விமர்சனம்
சென்னை: கபாலி படம் பார்த்த ஒன்இந்தியா ரசிகர்கள் தங்கள் கருத்துகளை எமது இணையதளத்தில் பதிவு செய்துள்ளனர்.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே ரஜினி நடித்த கபாலி படம் இன்று ரிலீஸாகியுள்ளது. கபாலி பட வெளியீட்டையொட்டி அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன. படத்தின் முதல் நாள் முதல் காட்சியை பார்த்த ஒன்இந்தியா ரசிகர்கள் தங்களின் கருத்துகளை வெளியிட்டுள்ளனர்.
ஒன்இந்தியா வாசகர்களின் விமர்சனம் இதோ,

சாதனை படம்
உலக சாதனை படம் என சரண் என்ற வாசகர் தெரிவித்துள்ளார்.

தாங்காது
படம் சப்புன்னு இருக்கு .....இன்னும் நல்லா எடுத்து இருக்கலாம் ...ஒரு வாரம் தாங்காது ,,, என்கிறார் ரஜினி ரசிகன்

நெருப்புடா
Su.ம்மா illa ஆஆ நெருப்புடா அடங்குமா மாஸ்சஸ் என்று தெரிவித்துள்ளார் பாலா.

இல்லை
படம் எதிர்பார்த்தபடி இல்லை ஆவரேஜ் தான் பாவம் அதிகவிலை கொடுத்து டிக்கெட் வாங்கியவர்கள் என மணி தெரிவித்துள்ளார்.

கண்டிப்பாக பாருங்கள்
படம் okay .. மலேசியா வாழ் தமிழர்களுக்காக போராடுகிறார். இங்க தமிழன் பொழப்பு சந்தி சிரிக்கிறது என்று காட்டி இருக்கிறார்கள். சில வசனங்கள் delete செய்யபட்டிருக்கிறது, காரணம் மலேசியா நாட்டில் மற்ற சமூகமும் இருப்பதினால்.. தமிழன் இந்த நிலைமைக்கு போக அவர்களும் காரணம் என்பதால்..ஆனால் என்னவோ இன்னும் நன்றாக எடுத்திருக்கலாம் என்று தோணுகிறது. மற்றபடி எல்லோரும் நன்றாக நடித்திருக்கிறார்கள்.. கண்டிப்பாக பாருங்கள் ரஜினி என்ற சகாப்தத்திற்காக என்கிறார் தேட்டாஸ்.

நல்லா இருக்கு
படத்தை லண்டனில் பார்த்தேன். படம் நன்றாக உள்ளது . ஆனால் இவ்வளவு பில்டப் கொடுத்து எதிர்பார்ப்பை தூண்டிவிட்டுருக்க வேண்டாம். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் போனால் படத்தை ரசிக்கலாம் . சிவாஜி , ரோபோ தரத்துக்கு படம் இல்லை. ஆனால் லிங்காவை விட நன்றாக உள்ளது என ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications