கபாலியும், வைரமுத்துவும்... சில பல நமைச்சல்களும்!
வைரமுத்து, ‘ கபாலி தோல்விப் படம் ' என்று பேசியிருப்பது தற்செயலான செயல் என்பது போல சில நண்பர்கள் எழுதி வருகிறார்கள் ( அவர்கள் அதற்கு முன்பிருந்தே கபாலிக்கு எதிராக எழுதி வருகிறவர்கள் என்பது வேறு விசயம்).
வைரமுத்து அளவிற்கு வாழ்க்கையில் வார்த்தையில் கவனமான ஒரு நபரைத் தேடித்தான் பிடிக்க வேண்டும்..
வைரமுத்து கபாலி குறித்து அப்படி ஒரு தகவல் சொல்வதற்கு பின்னால் பல காரணங்கள் இருக்கின்றன..

முதல் காரணம்
கடந்த பல ஆண்டுகளாகவே வைரமுத்தின் பங்களிப்பு இல்லாமல் ரஜினி பட பாடல்கள் எதுவும் வெளியானதில்லை.. அதாவது இளையராஜா காலத்திற்கு பின்பு..
கபாலிதான் நீண்ட காலத்திற்குப் பிறகு வைரமுத்து பங்களிப்பு இல்லாமல் வந்திருக்கிற முதல் படம்..
இந்தப் புறக்கணிப்பை சாதாரணமாக எடுத்துக்கொள்கிறவர் இல்லை வைரமுத்து என்பதை வைரமுத்தை அறிந்தவர்கள் அறிவார்கள்..
இந்த தவிர்ப்பு ஒரு எரிச்சலாக கோபமாக வன்மமாக வைரமுத்துவின் மனதில் இருந்து கொண்டேதான் இருந்திருக்கும்.. வைரமுத்து கபாலி தோல்வியடைய வேண்டும் என்று விரும்பியவராகக் கூட இருந்திருப்பார்.
அந்த நமச்சல்தான் படம் வெளியான மூன்றாம் நாளில் எந்த இங்கிதமும் இல்லாமல் இப்படியொரு வாக்கியத்தை அவரை பேச வைத்திருக்கிறது.
இரண்டாவதாக வைரமுத்து ஜாதிய சிந்தனை அற்றவர் என்றும் சொல்வதற்கில்லை. இளையராஜா வைரமுத்து பிரிவிலேயே ஜாதி முக்கிய காரணியாக இருந்திருக்கிறது..
வைரமுத்துவின் மூத்த மகன் ஜாதி விட்டு திருமணம் செய்த போது கூட அதை விரும்பாதவராக அவர் இருந்தார் என்கிற விதமான செய்திகள் உலாவத்தான் செய்தன. அவருடைய தனிப்பட்ட உரையாடல்கள் ஜாதிய வன்மம் கொண்டதாக இருப்பதாக பல தகவல்கள் இருக்கத்தான் செய்கின்றன..
ஆக வைரமுத்துவின் இந்த கபாலி குறித்த ஸ்டேட்மென்ட் உள்நோக்கம் கொண்டது. அரசியல் கொண்டது. ஜாதிய வன்மம் கொண்டதே!
கபாலி தோல்விப் படம் என்றால் அதை தயாரிப்பாளர் தாணு அறிவிப்பார்.
நீங்கள் ஏன் இவ்வளவு தவிக்கிறீர்கள்?
நூறு சதவீதம் நயமான ஒன்றைத்தான் நீங்கள் எப்பொழுதும் ஆதறிக்கிறீர்களா? அவ்வளவு நல்லவர்களா நீங்கள்?
- ஆர் பிரபாகர்












Click it and Unblock the Notifications