காலா பட டீசர் நாளை ரிலீஸ் ட்விட்டரில் உறுதி செய்த தனுஷ்

காலா டீசர் நாளை காலை 10 மணிக்கு வெளியாகும் என நடிகரும் படத்தின் தயாரிப்பாளருமான தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    இணையதளத்தில் வெளியான காலா பட வீடியோ

    சென்னை : காலா' படத்தின் டீசர் நாளை மார்ச் 2ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியாக உள்ளதாக இப்படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் சற்று முன்பு ட்விட்டரில் அறிவித்துள்ளார்.

    ரஜினிகாந்த் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கிய 'காலா' திரைப்படம் வரும் ஏப்ரல் 27ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    Kala Teaser Tomorrow 10 AM

    இந்நிலையில் படத்தின் மற்ற பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. டீசர் ரிலீஸ் மற்றும் ஆடியோ லாஞ்ச்சுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

    பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் 'காலா'. சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் இப்படத்தைத் தயாரித்திருக்கிறது.

    தனுஷ் தயாரிக்க, லைகா நிறுவனம் வெளியிடும் இந்தப் படத்தில், நானா படேகர், சமுத்திரக்கனி, 'வத்திக்குச்சி' திலீபன், ரமேஷ் திலக், மணிகண்டன், ஹுமா குரேஷி, அஞ்சலி பட்டேல், சாக்ஷி அகர்வால் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

    இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டே முடிந்து விட்டபோதும், '2.O' படத்திற்காக காலா படத்தின் ரிலீஸை தள்ளி வைத்தனர். அதனால் காலா டீசர் வெளியீட்டையும் தள்ளி வைத்திருந்தனர்.
    தற்போது '2.O' தள்ளிப் போனதால், அந்தப் படம் வெளியாகவிருந்த ஏப்ரல் 27ஆம் தேதி 'காலா' படம் திரைக்கு வருகிறது.

    'காலா' படத்தின் டீசர் மார்ச் 1ஆம் தேதி வெளியிடப்படும் என தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். ஆனால் டீசர் இன்று வெளியாகவில்லை. சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி மரணமடைந்த காரணத்தால் காலா படத்தின் டீசர் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டது. இதனால் ரஜினி ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.

    இந்த நிலையில் காலா படத்தின் டீசர் நாளை மார்ச் 2ஆம் தேதியன்று காலை 10 மணிக்கு வெளியாகிறது, அனைவருக்கும் நன்றி ஓம் நமச்சிவாயா என்று தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+