கலெக்டருக்கு ஆபாச மெசேஜ்.. ஸ்க்ரீன்சாட்டோடு IAS சங்கத்திற்கு போன புகார்.. தீவிரமாக விசாரித்த விஜய்!
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜாவுக்கு, தவெக எம்.எல்.ஏ. அருள் அனுப்பி ஆபாச மெசேஜ் விவகாரமும், துணை சபாநாயகர் ரவிசங்கருக்கு எதிரான விவகாரமும் முதல்வர் விஜய்க்கு தலைவலியைக் கொடுத்துள்ளது. இன்று நடக்கும் தவெக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் இவர்கள் இருவருக்கும் எதிராக கடுமையாக தனது கோபத்தை முதல்வர் விஜய் வெளிப்படுத்துவார் என்றும், இவர்கள் மீது எடுக்கும் ஆக்சன், அமைச்சர்களுக்கும் எம்.எல்.ஏ.க்க ளுக்கும் ஒரு பாடமாக இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.
ஆனால், எச்சரிக்கை செய்வதோடு நின்று விடுவார்; எந்த ஆக்சனும் முதல் வர் எடுக்கமாட்டார். ரவிசங்கர் விவகாரத்தைப் பொறுத்தவரை துணை சபாநாயகர் பொறுப்பிலிருந்து அவரை நீக்கப்படுவார். மற்றபடி கலெக்ட ருக்கு ஆபாச செய்தி அனுப்பிய எம்.எல்.ஏ. அருள் மீது எந்த நடவடிக்கையும் இருக்காது என்று தவெக அமைச்சர்களிடம் நேற்று முதல் விவாதம் ஓடிக் கொண்டிருக்கிறது. அதனால் இன்று நடக்கும் ஆலோசனைக் கூட்டம் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது.

கலெக்டருக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய விவகாரத்தில், எம்.எல்.ஏ. மீது ஆக்டன் எடுக்க வேண்டும் என்று அமைச்சர்கள் புஸ்சி ஆனந்த் மற்றும் வன்னிய அரசு ஆகிய 2 அமைச்சர்களின் கவனத்துக்கு கலெக்டர் பத்மஜா மற்றும் அவரது கணவரான ஐ.ஏ.எஸ். அதிகாரி ரஹ்மானும் எடுத்துச் சென்று ள்ளனர். ஆனால், அமைச்சர்கள் இருவரும் ஆக்சன் எடுக்காமல், நான் எந்த தவறும் செய்யவில்லை.. ஏ.ஐ. தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி திமுக பரப்பிய பொய்ச் செய்தி என விளக்கம் கொடுத்து விடுங்கள் என்று எம்.எல்.ஏ.அருளுக்கு யோசனை சொல்லியிருக்கிறார்கள். அதன்படி அவரும் விளக்கமளித்தார்.
இதனை ஜீரணிக்கமுடியாத பத்மஜாவும் அவரது கணவர் ரஹ்மானும், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சங்கத்தில் முறையிட்டுள்ளனர். சங்கத்திலுள்ள மூத்த அதிகாரிகள் சொன்ன ஆலோசனைப்படி, தலைமைச் செயலாளருக்கு தவெக எம்.எல்.ஏ. அருள் மீது புகார் கொடுத்தார் பத்மஜா. அந்த புகாரில், தமக்கு அருள் அனுப்பிய குறுஞ்செய்திகளையும் ஸ்க்ரீன் ஷாட் எடுத்து அதனையும் இணைத்து அனுப்பியுள்ளார் பத்மஜா. அது மட்டுமல்லாமல், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சங்கத்தின் பொறுப்பு அதிகாரிகளும், தலைமைச்செயலாளர் சாய் குமாரிடம் விவாதித்துள்ளனர். பத்மஜா புகார் மீது நீங்கள் ஆக்சன் எடுக்க வேண்டும். இல்லையெனில் பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு இந்த ஆட்சியில் பாதுகாப்பில்லை என்பது உறுதியாகும் என்று அழுத்தமாகச் சொல்ல, முதலமைச்சரிடம் இதைப்பற்றி சொல்லியிருக்கேன். கவனிப்பதாக சொல்லியிருக்கிறார். நிச்சயம் ஆக்சன் இருக்கும் என்று சங்க அதிகாரி களிடம் உறுதி தந்துள்ளார் சாய்க்குமார்.
இந்த நிலையில், முதல்வர் விஜய்யின் கவனத்துக்கு இந்த புகாரி சாய்க் குமார் சென்றபோது, அமைச்சர்கள் புஸ்சி ஆனந்த் மற்றும் வன்னியரசு இருவரும் இந்த புகாரை உங்களிடம் சொல்லாததில் ஐ.ஏ.எஸ். அதிகாரி சங்கம் கோபமாக இருக்கிறது சார். இந்த விவகாரத்தில் சம்மந்தப்பட்ட எம்.எல்.ஏ. மீது ஆக்சன் எடுக்கவில்லையெனில், மத்திய அரசிடம் புகார் தெரிவிக்க சம்மந்தப்பட்ட கலெக்டரும், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சங்கமும் தீர்மானித்திருப்பதாக தெரிகிறது என்று விவரித்திருக்கிறார் சாய்க்குமார்.
அப்போது, நடந்துள்ள சம்பவத்தை எதைச் சொல்லியும் நியாயப்படுத்த முடியாது. எம்.எல்.ஏ. அருள் செய்திருப்பது தண்டனைக்குரிய குற்றம் தான். ஆனால், அவரது பதவியை பறிக்கும் முடிவையா நாம் எடுக்க முடியும்? என்ன ஆக்சன் எடுத்தால் பாதிக்கப்பட்ட கலெக்டரும் அதிகாரிகள் சங்கமும் திருப் தியடையும்? கட்சியிலிருந்து வேண்டுமானால் அவரை நீக்கலாம். ஆனால், அது சரியானதா? அதனால், என்ன ஆக்சன் எடுக்க வேண்டும் என அவர்கள் எதிர்பார்க்கிறார்கள் என கேட்டுச் சொல்லுங்கள் என்று முதல்வர் சொல்லியிருப்பதாக அதிகாரிகள் தரப்பில் தகவல்கள் கசிந்துள்ளன.
குற்றம் செய்துள்ள எம்.எல்.ஏ. வை, பாதிக்கப்பட்ட கலெக்டரிடம் பகிரங்க மன்னிப்புக் கேட்கச் சொல்கிறோம். இனி இப்படி ஒரு சம்பவம் நடக்காமல் பார்த்துக் கொள்கிறோம். அதனால் விவகாரத்தை பெரிது படுத்த வேண்டாம் என கலெக்டரை சமாதானப்படுத்துங்கள் என்று சாய்குமாரிடம் விஷ்ணு ரெட்டி பேசி வருகிறார் என்கிறார்கள் அதிகாரிகள் தரப்பினர்.
இதற்கிடையே, முதல்வர் விஜய் தலைமையில் இன்று கநடக்கவிருக்கும் தவெக எம்.எல்.ஏ. க்கள் கூட்டத்திற்கு பிறகு இந்த விவகாரத்தின் அடுத்தக் கட்ட நிலை என்னவென்று தெரிய வரும்.
- சிறப்பு நிருபர் எழில்


Click it and Unblock the Notifications
