கள்ளக்குறிச்சியில் மாதா கோவில் கிட்ட அசையாமல் கிடந்த உருவம்.. கிட்ட பார்த்து கலங்கிய உளுந்தூர்பேட்டை
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே இந்த பயங்கரமான சம்பவம் நடந்துள்ளது.. அங்குள்ள மாதா கோவில் வளாகத்தில் அந்தோணி ஆரோக்கிய ஜோவை பார்த்ததுமே, கிராம மக்கள் கதிகலங்கி போயிருக்கிறார்கள்.. இது தொடர்பாக போலீசுக்கும் தகவல் அளிக்கப்பட்ட நிலையில், விசாரணையும் துரிதமாக நடந்து வருகிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது இருந்தை என்ற கிராமம்.. இங்கு வசித்து வருபவர் அந்தோணி ஆரோக்கிய ஜோ.. இவருக்கு 20 வயதாகிறது.. இவர் நேற்று முன்தினம் இரவு நண்பர்கள் சிலருடன் வீட்டை விட்டு வெளியே சென்றிருக்கிறார்.

ஆனால் அதற்கு பிறகு மறுபடியும் அந்தோணி வீட்டிற்கு வரவில்லை.. நேற்று காலை அந்த பகுதியிலுள்ள மாதா கோயில் வளாகத்தில் அந்தோணியின் சடலம் கிடந்ததை கண்டு அக்கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்..
அசைவின்றி அந்தோணி
பிரார்த்தனைக்காக சர்ச்சுக்கு சென்றபோது, அந்தோணி அசைவின்றி கீழே விழுந்து கிடப்பதை பார்த்துள்ளனர். எனினும் நைட் மது அருந்திவிட்டு, போதையில் படுத்திருப்பதாக அனைவரும் நினைத்து அவரை கடந்து சென்றுள்ளனர்.
ஆனால் பிரார்த்தனை முடிந்து திரும்பியபோதும், அந்தோணி அதே போல அசையாமல் படுத்திருப்பதை பார்த்துதான், சந்தேகப்பட்டு அருகில் சென்றிருக்கிறார்கள். அப்போது அவரது உடலில் ரத்த காயங்களுடன் கிடந்துள்ளன.. முகமெல்லாம் மோசமான நிலையில் சிதைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து, உடனடியாக திருநாவலூர் போலீசுக்கு அப்பகுதி மக்கள் தகவல் தந்தனர்..
போலீசாரும் விரைந்து வந்து அந்தோணியின் சடலத்தை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்..
மாதா கோவில் வளாகம்
பிறகு அந்தோணியின் மர்ம குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், அந்தோணி சம்பவத்தன்று இரவு நண்பர்களுடன் வெளியே சென்றது தெரியவந்தது. ஒருவேளை நண்பர்களுக்குள் திடீரென ஏற்பட்ட தகராறில் அந்தோணி ஆரோக்கிய ஜோ கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை ஆரம்பித்தனர்.
அப்போதுதான் பல்வேறு பகீர் தகவல்கள் வெளியாகின.. அதாவது அந்தோணி மீதும், அதே கிராமத்தைச் சேர்ந்த தேவா என்பவர் மீதும், கடந்த 2024ல் போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.. இந்த வழக்கின் விசாரணை நீதிமன்றத்திலும் நடந்து கொண்டிருக்கிறது.
யாரிந்த தேவா
இந்த வழக்கில், பிரதான குற்றவாளி தேவா என்பது தெரியவந்துள்ளது.. இது தேவாவின் தம்பி லிசன் (20) என்பவருக்கு ஆத்திரத்தை தந்தது.. தன்னுடைய அண்ணன் சிக்கி கொண்ட நிலையில், அந்தோணி மட்டும் தப்பித்துவிட்டாரே என்று கடுமையான கோபத்தில் இருந்துள்ளார்.
தன்னுடைய அண்ணனை பாலியல் வழக்கில் மாட்டிவிட்ட ஆரோக்கிய ஜோவை பலி வாங்க திட்டம் தீட்டியிருக்கிறார்.. இதற்காகவே சம்பவத்தன்று மதுபானத்தை வாங்கிய லிசன், அந்தோணியை மாதா கோவில் அருகே வர சொல்லி உள்ளார்.. அங்கே அந்தோணிக்கு அளவுக்கு அதிகமாக மதுவை ஊற்றி தந்துள்ளார்.
அடித்தே காலி செய்த லிசன்
இதில் அந்தோணி போதையால் மயங்கி விழுந்ததுமே, லிசன் மறைத்து வைத்திருந்த இரும்பு ராடால் அந்தோணியை தாக்கியிருக்கிறார்.. தலை, முகம் என உடம்பெல்லாம் அடித்தே கொன்றிருக்கிறார் என்பது விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து, லிசனை போலீசார் கைது செய்து, அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். போக்சோ வழக்கில் ஏற்பட்ட பகையால், இளைஞரை அடித்தே கொன்ற சம்பவம் கள்ளக்குறிச்சியை கலங்கடித்து வருகிறது.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications