கள்ளக்குறிச்சி விஏஓ தமிழரசியை ரூமில் வைத்து பூட்டினாரே சங்கீதா.. ஞாபகமிருக்கா? இப்ப சின்னசேலம் பரபர
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி வரலாற்றிலேயே இப்படி ஒரு சம்பவம் இதுதான் முதல்முறையாக நடந்திருக்கும்.. பணி மோதல் காரணமாக 2 பெண்களும் மோதிக்கொண்ட சம்பவம், பெரும் அதிர்ச்சியை தமிழகத்தில் ஏற்படுத்துகிறது.. அதிகாரிகள் தலையிட்டு துறைரீதியான நடவடிக்கை எடுத்தும்கூட, இந்த மோதல் வலுத்து கொண்டே போகிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் வடக்கனேந்தல் கிராமத்தில், தமிழரசி என்பவர் விஏஓ-வாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு 39 வயதாகிறது.. இதே அலுவலகத்தில், கிராம நிர்வாக உதவியாளராக சங்கீதா என்பவரும் வேலைபார்த்து வருகிறார்.

கடந்த டிசம்பர் 16ம் தேதி விஏஓ தமிழரசியை அலுவலகத்தில் வைத்து பூட்டு போட்டு பூட்டி விட்டு, கிராம நிர்வாக உதவியாளர் சங்கீதா சென்றுவிட்டார்.
அறையில் பூட்டு: இதனால், அதிர்ச்சி அடைந்த தமிழரசி, "கதவை பூட்ட வேண்டாம், இப்படி செய்தால், கடும் நடவடிக்கை எடுக்கச் செய்வேன், கதவைத் திறந்து விடு, இல்லாவிட்டால் தாசில்தாரிடம் சொல்லி நடவடிக்கை எடுக்க சொல்வேன்" என்று சத்தம் போட்டும், தமிழரசி மதிக்காமல் ஃபைல்களை எடுத்து கொண்டு, "உன்னால் முடிந்ததை பார்" என்று சொல்லிவிட்டு, தன்னுடைய பைக்கில் கிளம்பி சென்று விட்டார்.
இவையெல்லாம் வீடியோ காட்சிகளாக அன்று இணையத்தில் வைரலாகி பரபரப்பை கிளப்பியிருந்தன.. அறையில் மாட்டிக்கொண்ட தமிழரசி, உடனே உயரதிகாரிகளுக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தார். பின்னர் தாசில்தாருக்கும் தகவல் தரப்பட்டு, அதற்கு பிறகே அரை மணி நேரம் கழித்து, சங்கீதா பூட்டை திறந்துவிட்டாராம்.
வாக்குவாதம்: அதாவது, விஏஓ தமிழரசிக்கும், சங்கீதாவுக்கும் மோதல் போக்கு நிலவி வருவதுடன், 2 பேரும் அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபடுவதும் வழக்கமாக இருந்துவந்துள்ளது. இதுதான் உச்சக்கட்டமாக வெடித்து அறையில் பூட்டி வைக்கும் அளவுக்கு சென்றுவிட்டது.
தன்னை அறைக்குள் வைத்து சங்கீதா பூட்டிய சம்பவம் குறித்து, உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்திருந்தார் தமிழரசி. அத்துடன், இதுபோன்ற செயலில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கிராம நிர்வாக உதவியாளர் சங்கீதா மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்திருந்தனர்.
சங்கீதா கைது: இதையடுத்து மாவட்ட நிர்வாகம், சங்கீதாவை சஸ்பெண்ட் செய்து உத்தரவு பிறப்பித்தது.. இந்நிலையில், நேற்று சங்கீதா திடீரென விஏஓ தமிழரசி இருந்த அலுவலகத்துக்குள் புகுந்து, மாட்டு சாணியால் அடித்து அசிங்கப்படுத்தியிருக்கிறார்.. அத்துடன் அவரை கடுமையாக தாக்கியதாக தெரிகிறது. இதில் காயம் அடைந்த தமிழரசி கச்சிராயபாளையம் போலீஸில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து சங்கீதாவை கைது செய்திருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications