உயிரை உறிஞ்சும் கள்ளச்சாராயம்.. கள்ளக்குறிச்சியில் பலி 59 ஆக உயர்வு.. 151 பேருக்கு தொடர் சிகிச்சை
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று காலையில் பலி எண்ணிக்கை 59 ஆக உயர்ந்துள்ள நிலையில் மேலும் 151 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் கடந்த 18 ம் தேதி கள்ளச்சாராயம் வாங்கி குடித்துள்ளனர். மெத்தனால் கலந்து பாக்கெட்டுகளில் விற்பனை செய்யப்பட்ட சாராயத்தை அவர்கள் வாங்கி குடித்த நிலையில் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

இதையடுத்து அவர்களை குடும்பத்தினர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பலரும் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை, விழுப்புரம் அரசு மருத்துவமனைகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே தான் தொடர்ந்து பலரும் பலியாகி வருகின்றனர். நேற்று வரை மொத்தம் 58 பேர் வரை பலியாகி இருந்தனர். இந்நிலையில் தான் இன்று காலையில் பலி எண்ணிக்கை என்பது 59 ஆக அதிகரித்துள்ளது. அதாவது கள்ளக்குறிச்சி கோட்டை மேடு பகுதியை சேர்ந்த ஜான் பாட்ஷா என்பவர் இன்று காலையில் உயிரிழந்தார்.
இவர் கள்ளக்குறிச்சி மருத்துவக்கல்லூரியில் முதலில் சிகிச்சை பெற்றார். அதன்பிறகு உயர் சிகிச்சைக்காக சேலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி ஜான் பாட்ஷா பலியாகி உள்ளார்.
மேலும் தற்போது 4 மருத்துவமனைகளில் மொத்தம் 151 பேர் சிகிச்சையில் உள்ளனர். மருத்துவமனை வாரியாக பார்த்தால் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 5 பெண்கள் உள்பட 111 பேர் சிகிச்சையில் உள்ளனர். விழுப்புரம் அரசு மருத்துவமனையில் 4 பேர், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் 17 பேர், சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 29 பேர் என மொத்தம் 151 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் 10 பேருக்கு கண்பார்வை குறைபாடு ஏற்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
-
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
தமிழகத்தில் பெட்ரோல் – டீசல் தட்டுப்பாடு.. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பங்குகள் மூடல்.. மக்கள் அவதி












Click it and Unblock the Notifications