அரசு வேலை ரெடியா இருக்கு.. சொல்லி சொல்லியே ரூ.25 லட்சம் அள்ளிய நண்பர்.. கதிகலங்கிய கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி: அரசு வேலை வாங்கி தருவதாக கூறி, 2 பேர் சிக்கியிருக்கிறார்கள்.. இவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தும்போதுதான், பல்வேறு பகீர் தகவல்கள் வெளியாகின.. இதையடுத்து, சம்பந்தப்பட்டவர்களிடம் பாதிக்கப்பட்டவர்கள் யார் என்பது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
சமீபத்தில்கூட, தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளராக ஏசு ராஜசேகரன் மீது புகார் கிளம்பியது.. இவர், கன்னியாகுமரி மாவட்டம், புதுக்கடை போலீஸ் ஸ்டேஷனில் ஆய்வாளராக பணிபுரிந்தபோது அரசுவேலை வாங்கித் தருவதாக 27 பேரிடம் ரூ.1.47 கோடி பணம் பெற்றுக் கொண்டு, போலி பணி நியமன ஆணைகளை தந்துள்ளார்.

ஏசு ராஜசேகரனுக்கு மனைவி என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட கனகதுர்காவும் இந்த மோசடியில் இறங்கியிருக்கிறார்.. இவர்களால் பாதிக்கப்பட்ட நபர்கள் நாகர்கோவில் எஸ்.பி அலுவலகத்தில் புகார் தந்திருந்தனர்.
விசாரணை: இது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தும்போதே ஏசு ராஜசேகரன் மெடிக்கல் லீவு போட்டுவிட்டு சென்றுவிட்டாராம்.. இதனால், சங்கரன்கோவிலில் உள்ள அவரது வீட்டிற்கே நேரடியாக சென்றிருக்கிறார்கள் குமரி போலீசார்.. இதையடுத்து, கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி முன்பு ஆஜரான ஏசு ராஜசேகரன், இந்த மோசடிக்கும் தனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என எழுத்துப் பூர்வமாக எழுதி தந்தார்.. எனினும், ஏசு ராஜசேகரனை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி நெல்லை சரக டிஐஜி மூர்த்தி உத்தரவிட்டார்.
ஏசு ராஜசேகரனின் மனைவி என கூறப்படும் கனகதுர்கா, தேனி மாவட்டத்திலும் ரூ.1.11 கோடி மோசடி செய்தவராம்.. இவரையும் போலீசார் கைது செய்தனர்.. கன்னியாகுமரியில் மட்டும் ஏசு ராஜனும், துர்காவும், 27 பேரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்டிருக்கிறார்கள். இந்த சம்பவம் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது.
கள்ளக்குறிச்சி: இந்நிலையில், கள்ளக்குறிச்சியிலும் இதுபோன்ற ஒரு மோசடி நடந்துள்ளது.. கள்ளக்குறிச்சி எம்.ஆர்.என்., நகரை சேர்ந்தவர் துரை.. 65 வயதாகிறது.. இவருக்கு ஏற்கனவே அறிமுகமானவர் கலீல் ரகுமான்.. இவர் கோவை போத்தனூரை சேர்ந்தவர்.. 58 வயதாகிறது..
துரையின் மகன் கார்த்திக் என்பவருக்கு, அரசு வேலை வாங்கி தருவதாகவும், அதற்கு பணம் தர வேண்டும் என்றும் கலீல் ரகுமான் கூறியிருக்கிறார்.. இதை நம்பிய துரை, 9 லட்சத்து 68 ஆயிரத்து 500 ரூபாய் பணத்தை வங்கி கணக்கு மூலமாக கலீல் ரகுமானுக்கு அனுப்பியுள்ளார். கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து ஏப்ரல் மாதம் வரை 10 தவணைகளில் இந்த பணத்தை அனுப்பியிருக்கிறார்.. ஆனால், பல மாதங்களாகியும் அரசு வேலை கார்த்திக்கு வாங்கித்தரவில்லை.. பணத்தையும் துரைக்கு திருப்பி வரவில்லையாம்.
அதிரடி கைது: இது சம்பந்தமான புகாரை போலீசார் விசாரிக்கும்போதுதான், கள்ளக்குறிச்சி கிராமசாவடி தெருவை சேர்ந்த வெங்கட்ராமன் மகன் புண்ணியமூர்த்திக்கு அரசு வேலை வாங்கி தருவதாக, ரூ.15 லட்சத்து 41 ஆயிரத்து 500 பெற்று ஏமாற்றி உள்ளதும் தெரியவந்தது.. இதையடுத்து, கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிந்து கலீல் ரகுமானை கைது செய்து விசாரித்து கொண்டிருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications