கள்ளக்குறிச்சி ஜெகஜால கில்லாடி.. சரவணன் காலை பிடிக்க, அருள்மொழி கழுத்தை பிடிக்க.. கலங்கிய சின்னசேலம்
கள்ளக்குறிச்சி: சின்னசேலம் அருள்மொழி சொன்ன வாக்குமூலத்தை கேட்டு கள்ளக்குறிச்சி போலீசார் கதிகலங்கி போய்விட்டனர்.. இது தொடர்பான விசாரணையை போலீசார் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறார்கள். எனினும், சின்ன சேலத்தில் மரண அதிர்ச்சி இன்னும் விலகவில்லை.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியில் வசித்து வருபவர் தனவேல்.. 40 வயதாகிறது.. இவரது மனைவி, பெயர் அருள்மொழி.. 33 வயதாகிறது.. இந்த தம்பதிக்கு 3 பிள்ளைகள் இருக்கிறார்கள்.. தனவேலுக்கு குடிப்பழக்கம் இருந்ததாக தெரிகிறது.. இவர் எப்போது தண்ணி அடித்தாலும், சாப்பாடு எதுவும் சாப்பிடாமாலேயே சாப்பிடாமல் படுத்துக்கொள்வாராம்.

சடலம்: அப்படித்தான், கடந்த 5ம் தேதி இரவு 9.30 மணிக்கு குடித்துவிட்டு, தன்னுடைய வீட்டில் வந்து படுத்துள்ளார்.. ஆனால், காலையில் தனவேல் எழவில்லை. எனவே அவரது மனைவி அருள்மொழி, தனவேலுவை எழுப்பியபோது, அவர் இறந்து கிடந்தது தெரியவந்தது. இதையடுத்து, தனவேலின் தம்பி கருப்பன் என்பவர், கச்சிராயபாளையம் போலீசில் இதுகுறித்து புகார் செய்தார்..
போலீசாரும் விரைந்து வந்து சடலத்தை கைப்பற்றி, கள்ளக்குறிச்சி மாவட்ட மருத்துவமனைக்கு போஸ்ட் மார்ட்டம் செய்ய அனுப்பி வைத்தனர்... அந்த போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டில் மூச்சுத்திணறி தனவேல் இறந்தது தெரியவந்தது.
சிசிடிவி கேமரா: இதையடுத்து போலீசார், தனவேல் வீட்டுக்கு பக்கத்திலிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளையும் ஆராய்ந்தனர்.. அப்போது அவர்கள் வசித்து வரும் தெருவில், நள்ளிரவில் மர்ம நபர் ஒருவர் முகத்தில் துணி கட்டிக்கொண்டு நடமாடியது பதிவாகியிருந்தது..
இதனால், மனைவி அருள்மொழியிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினார்கள்.. அபபோதுதான், அருள்மொழியின் கள்ளக்காதல் அம்பலமானது.. கச்சிராயபாளையத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சரவணன் என்பவருடன் அருள்மொழிக்கு தவறான பழக்கம் இருந்து வந்துள்ளதும் உறுதியானது.. இதையடுத்து கச்சிராயபாளையம் போலீசார் , கள்ள ஜோடி இருவரையும் கைது செய்தனர்.
வெறுப்பு: பின்னர் அருள்மொழி போலீசில் அளித்துள்ள வாக்குமூலத்தில் சொல்லியிருப்பதாவது: "எங்களுக்கு கல்யாணமாகி 8வருடத்துக்கு மேலாகிவிட்டது.. என் கணவருக்கு குடிப்பழக்கம் உண்டு. தினமும் குடித்துவிட்டு அடிக்கடி என்னிடம் தகராறு செய்து வந்தார். இதனால் மனம் வெறுத்த நான் என் கணவரை கொன்றுவிடலாம் என்று முடிவு செய்தேன்.

கடந்த 5ம் தேதி இரவும் இப்படித்தான் குடித்துவிட்டு வந்து என்னிடம் தகராறு செய்தார். இதனால் ஆத்திரமடைந்த நான் என்னுடைய கள்ளக்காதலன் சரவணனுக்கு போனை போட்டு, நள்ளிரவில் வீட்டுக்கு வரவழைத்தேன்.
வாக்குமூலம்: என் கணவர் தூங்கிக்கொண்டிருந்தபோது, அவரது காலை சரவணன் பிடித்து கொள்ள, நான் தலையணையால் கணவரின் முகத்தில் அழுத்தினேன். இதில் அவர் மூச்சு திணறி இறந்து விட்டார்" என்று வாக்குமூலம் தந்துள்ளார்.. தொடர்ந்து கள்ளஜோடியிடம் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. இப்போது அம்மாவும் இல்லாமல், அப்பாவும் இல்லாமல், அந்த 3 குழந்தைகளும் கதறி கொண்டிருக்கின்றன.












Click it and Unblock the Notifications