கணவன் முகத்தை கூட பார்க்க விடல.. கடைசி நொடியில் என்ன பண்ணுவேன்? வெடித்து கதறும் கள்ளக்குறிச்சி சாரதா
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து, தீவிர சிகிச்சைக்கு பிறகு உயிர்பிழைத்த பெண் சாரதா என்பவர் கண்ணீர் பேட்டி தந்துள்ளார்.
கள்ளக்குறிச்சியில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்ததால் உடல்நலம் பாதிக்கப்பட்ட 219 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் இதுவரை 63 பேர் உயிரிழந்துள்ளனர்.

மருத்துவமனை: கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம் மற்றும் புதுச்சேரி மருத்துவமனைகளில் 155-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்களில், 5 பேர் டாக்டர்களின் தீவிர சிகிச்சையால் உயிர் பிழைத்து, மீண்டு வந்துள்ளனர். அதில் ஒருவர்தான் சாரதா.
பிரபல தொலைக்காட்சிகளுக்கு சாரதா தொடர்ந்து பேட்டிகளை தந்துவருகிறார்.. அதில், விஷசாராயம் குடித்து இறந்த தன்னுடைய கணவரின் முகத்தை கூட பார்க்க முடியவில்லையே என்று கதறி வெடித்து அழுதபடியே சொல்கிறார். சாரதாவுக்கு வயது 50 வயதாகிறது.
கண்ணீர்: ஒரு சேனலுக்கு அளித்த பேட்டியில் சாரதா சொல்கிறார், "நான் வீட்டு வேலை செய்து வருகிறேன். புதன்கிழமை காலையில் நான் வேலைக்கு போய்விட்டேன்.. என்னுடைய கணவா் முருகன், சாராயத்தை வாங்கி குடித்து விட்டு, பிறகு அதை ஒரு கேனில் ஊற்றி வைத்து விட்டு தூங்கிவிட்டாா். நான் வேலைக்கு போய்ட்டு வந்ததுமே, தாகமாக இருந்ததால் அதை தண்ணீா் என்று நினைத்து குடித்தேன்.
அப்போது என்னுடைய கணவா் திடீரென வாந்தி எடுத்தாா். இதனால் அதிா்ச்சியடைந்த நான் என்னுடைய உறவினா்களை அழைத்து, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தேன். கொஞ்ச நேரத்தில் எனக்கும் மயக்கம் வந்துவிட்டது. அதனால் நானும் மருத்துவமனைக்கு சென்றேன். அதற்கு பிறகு எங்கள் இருவரையும் தனித்தனி ஆம்புலன்ஸ் மூலம் புதுச்சோி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள்.. ஆனால் வழியிலேயே கணவா் இறந்து விட்டாா். நான் மட்டும் புதுச்சோிக்கு சென்றேன்.
அனுமதி மறுப்பு: என்னுடைய கணவா் இறந்தது பற்றி எனக்கு தகவல் வந்தபோது, நான் உடனே கிளம்பி போகணும் என்று டாக்டர்களிடம் தொிவித்தேன். ஆனால் என்னை டாக்டா்கள் அனுப்ப மறுத்துவிட்டனா். அதனால், என்னுடைய கணவாின் முகத்தை கூட பாா்க்க விடாமல் அவரை அடக்கம் செய்து விட்டார்கள்..
மருத்துவமனையிலிருந்து இப்போது வீட்டுக்கு வந்து விட்டேன். ஆனால் எனது கணவா் இல்லாதது மிகுந்த வேதனை அளிக்கிறது. சாராயம் விற்பதை தடுக்க அரசு முயற்சி எடுக்க வேண்டும்" என்றார் சாரதா.
யாருக்கும் வரக்கூடாது: இன்னொரு சேனலுக்கு அளித்த பேட்டியில் சாரதா சொல்லும்போது, "புதுச்சேரி மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே என்னுடைய கணவர் இறந்து விட்டதாக சொன்னதுமே, எனக்கு அழுகையாக வந்தது, ஆனால் என்ன செய்ய முடியும்? மருத்துவமனையில் என்னை விடவில்லை. என் நிலைமை யாருக்கும் வரக்கூடாது..
கணவர் இறுதிச் சடங்கில் கூட மனைவியான என்னால் கலந்து கொள்ள முடியவில்லையே.. இதுதான் வாழ்க்கையா? கடைசியாக என்னுடைய கணவரின் முகத்தைக் கூடப் பார்க்க முடியவில்லை. என்னைப் போல் இந்த பகுதியில் நிறைய பெண்கள் விதவைகளாக மாறிவிட்டனர். இதற்கெல்லாம் காரணமானவர்களைத் தண்டிக்க வேண்டும். கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும்" என்று அழுதுகொண்டே சொல்கிறார் சாரதா.












Click it and Unblock the Notifications