கள்ளக்குறிச்சி தொகுதி: வெல்லும் வேட்கையில் வேட்டையாடும் திமுக vs அதிமுக vs பாமக vs நாம் தமிழர்!

Subscribe to Oneindia Tamil

கள்ளக்குறிச்சி: திமுக, அதிமுக, பாமக மூன்றுமே வலிமையாக இருக்கும் கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதியில் வெல்லப் போவது யார் என்பது பெரும் எதிர்பார்ப்புக்குரியதாக இருந்து வருகிறது. இந்த 3 கட்சிகளுடன் நாம் தமிழர் கட்சியும் களமாடுவதால் கள்ளக்குறிச்சி தேர்தல் களம் தகித்துக் கொண்டிருக்கிறது.

2008 தொகுதி மறுசீரமைப்பில் உருவான கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதிக்குட்பட்ட சட்டசபை தொகுதிகள்: ரிஷிவந்தியம், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி (தனி), கங்கவள்ளி (தனி), ஆத்தூர் (தனி), ஏற்காடு (தனி). மொத்தம் 4 தனி சட்டசபை தொகுதிகளைக் கொண்ட ஒரே பொதுத் தொகுதி கள்ளக்குறிச்சிதான்.

Kallakurichi Lok Sabha constituency Candidate List Assembly Constituencies Voters Count and Election Results

கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதி ஆண் வாக்காளர்கள்; 7,73,121; பெண்கள்- 7,94,588; 3-ம் பாலினத்தவர் 228; கள்ளக்குறிச்சி மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை- 15,67,937.

2009-ம் ஆண்டு கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதி தேர்தல் முடிவுகள்:

ஆதி சங்கர்(திமுக) 3,63,601
தனராஜ்(பாமக) 2,54,993
கே. எல்.சுதீஷ் (தேமுதிக)1,32,223

2014-ம் ஆண்டு தேர்தல் முடிவுகள்:

காமராஜ் (அதிமுக) 5,33,383
இரா.மணிமாறன்(திமுக) 3,09,876
ஈஸ்வரன்(தே.மு.தி.க) 1,64,183
தேவதாஸ் (காங்கிரஸ்) 39,677

2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தல் முடிவுகள்:

கவுதம சிகாமணி (திமுக) 7,21,713
கேஎல் சுதீஷ் (தேமுதிக) 3,21,794
கோமுகி மணியன் (அமமுக) 50,179
சர்புதீன் (நாம் தமிழர் கட்சி) 30,246
கணேஷ் (மக்கள் நீதி மய்யம்) 14,587

2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தல் வேட்பாளர்கள்

மலையரசன் (திமுக)
குமரகுரு (அதிமுக)
தேவதாஸ் (பாமக)
ஜெகதீசன் ( நாம் தமிழர் கட்சி)

கள்ளக்குறிச்சி கள நிலவரம் என்ன? கள்ளக்குறிச்சி நகரின் போக்குவரத்து நெரிசல் பிரதான பிரச்சனையாக உள்ளது. அரிசி, சர்க்கரை ஆலைகள் மேம்பாடு, இத்தொகுதியின் மற்றொரு முதன்மை பிரச்சனை. கல்வராயன் மலைவாழ் மக்களின் அடிப்படைத் தேவைகள் குறித்தும் வேட்பாளர்கள் வாக்குறுதிகளை முன்வைக்கின்றனர். மணிமுக்தா, கோமுகி அணைகளை மேம்படுத்துவதையும் வாக்குறுதியாக அரசியல் கட்சிகள் முன்வைத்து வருகின்றன. ஏற்காடு தொகுதி மலை கிராமங்களின் அடிப்படை வசதிகள் இன்னமும் பிரச்சனைக்குரியதாகவே இருந்து வருகிறது. இத்தகைய பின் தங்கிய தகவல் சிறிய தகவல் தொழில்நுட்பப் பூங்காக்களை உருவாக்க வேண்டும் என்பதும் பொதுமக்களின் கோரிக்கை. இத்தொகுதியில் திமுக, அதிமுக, பாமக மூன்றும் சமபலத்துடன் களம் காண்கின்றன. இவர்களுடன் நாம் தமிழர் கட்சியும் மல்லுக்கட்டுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+