கள்ளக்குறிச்சியில் காதலித்த மகள்.. முட்டை பொடிமாஸில் "அதை" கலக்கிய அன்பான அம்மா.. இப்போ அந்த பொண்ணு?

Subscribe to Oneindia Tamil

கள்ளக்குறிச்சி: இன்ஸ்டாகிராமில் உருகி உருகி, இளைஞர் ஒருவரை, தன்னுடைய மகள் காதலிப்பது பெற்ற தாய்க்கு பிடிக்கவில்லை.. இதனால், மகளுக்கு பலவிதமான அறிவுரைகளை தந்துகொண்டேயிருந்தார். எந்த அட்வைஸையும் மகள் கேட்காத நிலையில், இப்படியொரு முடிவை எடுத்து விட்டார் தாய்.

கள்ளக்குறிச்சி அருகே உள்ளது புதுப்பட்டு.. இங்கு வசித்து வரும் தம்பதி முனுசாமி - மல்லிகா.. இதில் மல்லிகாவுக்கு 47 வயதாகிறது.. இந்த தம்பதியினருக்கு குறிஞ்சி என்ற 20 வயதில் மகள் இருக்கிறார்.

kallakurichi

சங்கராபுரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. கணினி அறிவியல் 3ம் வருடம் படித்து வருகிறார் குறிஞ்சி.. இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம், சாய்குமார என்பவர் அறிமுகமானார்.. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை சேர்ந்தவர் சாய்குமார்..

கள்ளக்குறிச்சி: நாளடைவில் இவர்களின் நட்பானது, காதலாக மாறியது... இருவரும் செல்போன் நம்பர்களை பரிமாறிக் கொண்டு, அடிக்கடி போனில் பேசி வந்தனர்.. இதனால் காதலும் ஆழமாக வளர்ந்தது.. இந்த விஷயம், குறிஞ்சியின் அம்மா மல்லிகாவுக்கு தெரிந்துவிட்டது. இதனால், கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அத்துடன், காதலை கைவிட்டு படிப்பில் மட்டும் கவனம் செலுத்துமாறு அட்வைஸ் தந்தார்.

ஆனாலும் குறிஞ்சியோ அதை கேட்காமல், சாய்குமாருடன் தொடர்ந்து செல்போனில் பேசி வந்ததார். இதில் ஆத்திரமடைந்த மல்லிகா, சொல்பேச்சை கேட்காத மகள், இல்லாமல் இருப்பதே மேல் என்று முடிவு செய்து, பெற்ற மகளை கொலை செய்ய திட்டமிட்டார்.. இதற்காக சாப்பாட்டில் விஷம் கலந்து தருவது என்றும் முடிவெடுத்தார்.

முட்டை பொரியல்: அதன்படி, முட்டை பொரியலில் எலி மருந்தை கலந்து தன்னுடைய மகளுக்கு கொடுத்துள்ளார். இதுதெரியாமல் குறிஞ்சியும், அம்மா தந்த சாப்பாட்டை சாப்பிட்டுவிட்டார்.. சிறிது நேரம் கழித்துதான், முட்டை பொரியலில் விஷம் கலந்து தந்துவிட்டதாக மகளிடம் சொன்னார் மல்லிகா.

இதைக்கேட்டதுமே அதிர்ச்சி அடைந்த குறிஞ்சி, உடனே மயங்கி கீழே விழுந்தார். இதனால் குறிஞ்சியை அவரது அப்பாவும், அண்ணனும் மீட்டு, சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் ஆபத்தான நிலைமையில் கொண்டுபோய் அனுமதித்தனர்.. அங்கு குறிஞ்சிக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்..

விசாரணை: இதுகுறித்து குறிஞ்சி அளித்த புகாரின் பேரில் வடபொன்பரப்பி போலீசார் கொலை முயற்சி பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து மல்லிகாவை கைது செய்து விசாரணை நடத்தி கொண்டிருக்கிறார்கள்.. காதலை கைவிடாததால் கோபத்தில், முட்டை பொரியலில் விஷத்தை தந்து, மகளையே தாய் கொல்ல துணிந்திருப்பது கள்ளக்குறிச்சியில் பெரும் அதிர்ச்சியை தந்து கொண்டிருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+