நான் உன் பொண்ணுதானம்மா.. விஷ முட்டையை சாப்பிட்டபடியே கேட்ட மகள்.. அசையாமல் நின்ற கள்ளக்குறிச்சி தாய்
கள்ளக்குறிச்சி: மகளுக்கு முட்டையில் விஷம் கலந்த தாயை, கள்ளக்குறிச்சி போலீசார் கைது செய்து விசாரித்து கொண்டிருக்கிறார்கள்.. இந்நிலையில், மகளின் காதலை, அவரது தாய் எப்படி கண்டுபிடித்தார்? விஷம் வைக்க முட்டையை தேர்ந்தெடுத்தது ஏன்? என்ன நடந்தது? என்பது குறித்த கூடுதல் தகவல்கள் தற்போது வெளியாகியிருக்கின்றன.
கள்ளக்குறிச்சி அருகே புதுப்பட்டு பகுதியில் வசித்து வருகிறார்கள் தம்பதி முனுசாமி - மல்லிகா.. இவர்களது 20 வயது மகள் சங்கராபுரம் பகுதியிலுள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. கணினி அறிவியல் 3ம் வருடம் படித்து வருகிறார்..

இவர் இன்ஸ்டாகிராம் மூலம், அறிமுகமான இளைஞர் ஒருவரை காதலித்து வந்துள்ள நிலையில், இதை தாய் கண்டித்துள்ளார்.. ஆனால், அவரது பேச்சை மதிக்காமல், மகள் தொடர்ந்து காதலில் ஈடுபடவும், முட்டை பொரியலில் விஷம் வைத்து, மகளுக்கு சாப்பிட தந்துள்ளார்.. இதை சாப்பிட்ட மகளும் மயங்கி விழுந்த நிலையில் மீட்கப்பட்டு, தற்போது சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பந்தப்பட்ட இளைஞர் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை சேர்ந்தவராம். ஆரம்பத்தில் நட்புடன் ஆரம்பித்த உறவு, இறுதியில் காதலில் முடிந்தது. இதனால், செல்போன் நம்பர்களை பரிமாறிக் கொண்டு, அடிக்கடி போனில் பேசி வந்தனர்..
கண்டிப்பு: சமீபகாலமாக தன்னுடைய மகள் தானாக சிரித்து கொள்வது, தானாக பேசிக்கொள்வது போன்ற மாற்றங்களை கவனித்துள்ளார் மல்லிகா.. இதனால், மகளை கண்காணிக்க துவங்கினாராம். அப்போதுதான், காதலனுடன் போனில் பேசியதை கேட்டுள்ளார்.. காதலில் வலையில் மகள் சிக்கியிருப்பதை அறிந்து, மகளை தனியாக அழைத்துச் சென்று பேசியிருக்கிறார். காதலனை பார்க்கக் கூடாது, பேசக் கூடாது என்றும் கண்டித்துள்ளார்.
இதற்கு மகள் எதிர்ப்பு காட்டியிருக்கிறார்.. அத்துடன் காதலை கைவிட முடியாது என்றும் கூறியிருக்கிறார்.. இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.. பிறகு, வாக்குவாதம் முற்றிய நிலையில்தான், ஆத்திரமடைந்த கடைக்கு சென்று எலி பேஸ்டை வாங்கி வந்தாராம் மல்லிகா. மகளுக்கு முட்டை பொரியல் என்றால் மிகவும் பிடிக்குமாம்.. அதனால், முட்டைப் பொரியல் செய்து, அதில் எலி மருந்தை கலந்து தந்துள்ளார்..
முழு சாப்பாடு: இது தெரியாத மகளும், முழு சாப்பாட்டையும் சாப்பிட்டிருக்கிறார்.. எப்போதும்போல, தன்னுடைய அம்மாவுடன் பேசிக் கொண்டே, அந்த சாப்பாட்டை சாப்பிட்டாராம்..
பிறகுதான் திடீரென "நீ சாப்பிட்ட முட்டைப் பொரியலில் எலி பேஸ்ட் கலந்துட்டேன்" என்று மகளிடம் சொல்லியிருக்கிறார் மல்லிகா.. அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த மகள், "என்னம்மா, இப்படி பண்ணிட்டியே. நான் உன் பொண்ணுதானம்மா" என்று கேட்டபடியே கீழே மயங்கி விழுந்திருக்கிறார்.
நுரைதள்ளி: அதற்குள் வெளியில் சென்றிருந்த கணவனும், மகனும் வீட்டிற்குள் நுழைந்துள்ளனர்.. வாயில் நுரைதள்ளி கிடக்கும் மகளை கண்டு அதிர்ச்சி அடைந்து, அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மீட்டு, உடனடியாக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்.. இப்போது ஐசியூவில் தீவிரமான சிகிச்சை மகளுக்கு நடந்து கொண்டிருக்கிறது.. சிகிச்சையின்போதே மகள் தந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்திருக்கும் சங்கராபுரம் போலீஸார், மல்லிகாவை கைது விசாரித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications