கள்ளக்குறிச்சி கலவரம்: சைடு கேப்பில் கைவரிசை.. பள்ளியின் மேஜை, ஏசி, பெஞ்சை அள்ளிச்சென்ற கும்பல்
கள்ளக்குறிச்சி: வன்முறைக்கு இடையே, பள்ளியில் இருந்து மேஜை, ஏசி, பெஞ்ச் உள்ளிட்ட பொருட்களை மக்கள் அள்ளிச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கணியாமூரில் உள்ள ஒருதனியார் பள்ளி விடுதியில் தங்கி பிளஸ்-2 படித்து வந்த மாணவி உயிரிழப்பை கண்டித்து நடைபெற்று வந்த போராட்டம் இன்று கலவரமாக மாறியது. போராட்டக்காரர்கள் கற்களை வீசி தாக்கியதில் போலீசார் உள்பட 20 பேர் காயம் அடைந்தனர்.

கலவரம்
பின்னர் பள்ளிக்குள் போராட்டக்காரர்கள் நுழைந்து அங்கிருந்த பொருட்களை சூறையாடினார்கள். பள்ளியின் நுழைவு வாயில் கேட்டை உடைத்த அவர்கள் அங்கிருந்த நாற்காலிகளை தூக்கி வந்து சாலையில் போட்டு தீவைத்து எரித்தனர். மேலும் பள்ளி வளாகத்தில் இருந்த பள்ளி பஸ்களுக்கு தீ வைத்தனர். பஸ்கள் கொழுந்து விட்டு எரிந்ததால் அந்த பகுதி போர்க்களம் போல் காட்சியளித்தது. இதையடுத்து அதிரடி படையினர் வரவழைக்கப்பட்டு போராட்டக்காரர்கள் விரட்டி அடிக்கப்பட்டனர்.

போராட்டம்
தடியடி நடத்தியும் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் போராட்டக்காரர்களை அவர்கள் கலைத்தனர். பள்ளி வளாகம் பகுதி தற்போது போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்நிலையில் கள்ளக்குறிச்சி தாலுகா மற்றும் பள்ளிக்கு அருகில் இருக்கக்கூடிய சின்னசேலம் மற்றும் நயினார் பாளையம் ஆகிய பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அனைவரும் அமைதி காக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கேட்டுக்கொள்வதாக மாவட்ட ஆட்சியர் வலியுறுத்தியுள்ளார்.

திருட்டு
இதனிடையே, கலவரத்திற்கு மத்தியில், கையில் கிடைத்தை சுருட்டி கொண்டு ஓடி விடலாம் என ஒரு கும்பல் பள்ளிக்குள் நுழைந்தது. பள்ளியில் இருந்த பொருட்களை எல்லாம் ஆளாளுக்கு அள்ளிச் சென்றனர். பெஞ்ச், நாற்காலி, ஏசி, உள்ளிட்ட பொருட்கள் என எதையும் விட்டு வைக்காமல் போட்டிப் போட்டுக்கொண்டு சுருட்டிச் சென்றனர். கையில் கிடைத்த பொருட்களை எல்லாம் இரு சக்கர வாகனங்களில் அள்ளிச் சென்றனர்.
Recommended Video

சிசிடிவி
ஒருபுறம் கலவரத்தால் அப்பகுதி ரணகளமாக காட்சி அளிக்கும் நிலையில், மறுபுறம் இதுதான் சமயம் என, பள்ளியில் இருந்த பொருட்களை போட்டிப் போட்டுக்கொண்டு அள்ளிச் சென்றதால், அந்த பகுதியே, ஒரு சந்தை போல் காட்சி அளித்தது. என்ன சூழ்நிலை நிலவி வருகிறது என்று சிறிதும் எண்ணிப் பார்க்காமல், இப்படியும் ஒரு சிலர் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
-
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications