எம்எல்ஏவுக்கு 39 வயசு.. என் மகளுக்கு 19 தான் ஆகுது.. எப்படிங்க?.. கதறி அழும் கோவில் குருக்கள்!

எம்எல்ஏவிடம் இருந்து பெண்ணை மீட்டு தர கண்ணீர் கோரிக்கை விடுக்கிறார் கோயில் குருக்கள்

Subscribe to Oneindia Tamil

கள்ளக்குறிச்சி: "பிரபுக்கு வயசு 39 ஆகுது.. என் பொண்ணுக்கு வயசு 19தான் ஆகுது.. 10 வருஷமா என் பொண்ணை லவ் பண்றதாக சொல்றார்.. அப்படின்னா 9 வயசுலேயே என் பொண்ணை லவ் பண்ணாரா? 20 வயசு வித்தியாசத்தை எப்படி ஏத்துக்கறது? 39 வயசு ஆளுக்கு 19 வயசு பொண்ணா? ரொம்ப மனஉளைச்சலா இருக்கு... வேதனையாக இருக்கு" என்று பெட்ரோலை ஊற்றி தற்கொலைக்கு முயன்ற பெண்ணின் தகப்பனார் கண்ணீருடன் கூறுகிறார்.

Recommended Video

    அதிமுக MLA Prabhu காதல் திருமணம் | கண்ணீர் வடிக்கும் பெண்ணின் அப்பா

    அதிமுகவின் கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் பிரபு... இவர் சவுந்தர்யா என்ற பெண்ணை காதலித்து வந்தார்.. அவர் ஒரு கல்லூரி மாணவி.

    இவரை இன்று சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டார் பிரபு.. தியாகதுருகத்தில் உள்ள அவரது வீட்டில் எம்எல்ஏவின் பெற்றோர்கள் தலைமையில் எளிமையான முறையில் இந்த கல்யாணம் நடந்து முடிந்தது.

    தலைவர்கள்

    தலைவர்கள்

    இதையடுத்து எம்எல்ஏ பிரபு - சௌந்தர்யா தம்பதிக்கு அதிமுக நிர்வாகிகள் பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர். ஆனால், உறவினர்கள் மட்டும் பங்கேற்ற இந்த கல்யாணத்தில் அரசியல் தலைவர்கள் யாரும் பங்கேற்கவில்லை... இவர் விரைவில் முதல்வரை சந்தித்து வாழ்த்து பெறுவார் என்றே சொல்லப்படுகிறது.

     தீக்குளிக்க முயற்சி

    தீக்குளிக்க முயற்சி

    ஆனால், இந்த கல்யாணத்துக்கு சவுந்தர்யா குடும்பத்தில் இருந்து எதிர்ப்பு கிளம்பி உள்ளது.. குறிப்பாக அவரது அப்பா சுவாமிநாதன் தீக்குளிக்கவே முயற்சி செய்துள்ளார்.. இன்று விடிகாலை 4 மணிக்கு கல்யாணம் என்றால், 7 மணிக்கு பெண்ணின் அப்பா, எம்எல்ஏ பிரபு வீட்டின் முன்பு தீக்குளிக்க முயன்றுள்ளார்.. இதற்கு பிறகு அவரை தடுத்து நிறுத்திய போலீசார், ஸ்டேஷனுக்கு அழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.. இனி தற்கொலை முயற்சியில் ஈடுபட போவதில்லை என்பதையும் அவரிடம் எழுதி வாங்கி உள்ளதாக தெரிகிறது.

     ஒன் இந்தியாவுக்கு பேட்டி

    ஒன் இந்தியாவுக்கு பேட்டி

    இதனிடையே, சம்பந்தப்பட்ட பெண்ணின் அப்பா சுவாமிநாதனை நாம் "ஒன் இந்தியா தமிழ்" சார்பாக தொடர்பு கொண்டு பேசினோம்.. அப்போது நம்மிடம் அவர் வேதனையில் சொன்னதாவது: "இங்க இருக்கிற ஒரு அம்மன் கோயில்லதான் நான் குருக்களா இருக்கேன்.. 13 வருஷத்துக்கு மேல பிரபு எங்களுக்கு ரொம்ப பழக்கம்.. கோயிலுக்கு அடிக்கடி வருவார்.. அப்பறம் வீட்டுக்கும் வர ஆரம்பிச்சார்.

     வேதனையா இருக்கு

    வேதனையா இருக்கு

    அவர் குடும்ப கஷ்டங்களை எங்களிடம் சொல்லுவார்.. ஆனா, என் பொண்ணுக்கு இப்போ 19 வயசுதான் ஆகுது.. பிரபுக்கு 39 வயசாகுது. 10 வருஷமா என் பொண்ணை லவ் பண்றதாக சொல்றார்.. அப்படின்னா 9 வயசுலேயே என் பொண்ணை லவ் பண்ணாரா? 20 வயசு வித்தியாசத்தை எப்படி ஏத்துக்கறது? ரொம்ப மனஉளைச்சலா இருக்கு... வேதனையாக இருக்கு.

    அறிவுரை

    அறிவுரை

    என் மகள் லவ் பண்ற விஷயமே எனக்கு 9 மாசத்துக்கு முன்னாடிதான் தெரியும்.. அப்பவே மகளுக்கு அறிவுரை சொன்னேன்.. ஆனால், எதைஎதையோ பேசி என் பொண்ணு மனசை மாத்திட்டாரு.. 13 வருஷத்துக்கு முன்னாடியே இவருக்கு எஸ்ஆர்எம் கல்லூரியில் படிச்சிட்டிருந்த ஒரு பொண்ணோட கல்யாணம் ஆச்சு.. அது முறிஞ்சு போச்சுன்னு நினைக்கிறேன்..

    மிரட்டல்

    மிரட்டல்

    இதை பற்றி புகார் தர போறதா சொன்னால், என்னை ஒன்னும் செய்ய முடியாதுன்னு சொல்லி கொலை மிரட்டல் விடுத்தாரு.. என் பொண்ணை யாராவது மீட்டு தாங்க.. இன்னைக்கு காலைல கல்யாணம் தடபுடலா நடந்திருக்கு.. நான் 7 மணிக்கு அந்த வீட்டுக்குள்ள நுழைஞ்சேன்.. இதெல்லாம் நியாயமா? கூடவே இருந்து என் குடும்பத்தை குழி பறிச்சிட்டியே இது நியாயமான்னு பிரபுவை கேட்டேன்.

     நம்பிக்கை துரோகம்

    நம்பிக்கை துரோகம்

    இந்த கல்யாணத்துக்கு என் உயிரையே பரிசா தர்றேன்னு சொல்லிதான், வீட்டு முன்னாடி பெட்ரோலை ஊத்தி கொளுத்திக்க போனேன்.. நான் சாதி பார்க்கிறவன் இல்லை.. மதம் பார்க்கிறவன் இல்லை.. காதலுக்கும் நான் எதிரி கிடையாது... ஆனால், 20 வயசு அதிகமான நபருக்கு எப்படி என் பொண்ணை தர்றது? நம்பிக்கை துரோகத்தை எப்படி ஏத்துக்கறது? இதுதான் என் வேதனை.. எம்பொண்ணுகிட்ட நான் பேசணும்னு சொன்னேன்.. அதுக்கும் அவரு சம்மதிக்கல.. என் பொண்ணு எனக்கு வேணும்" என்று கண்ணீருடன் நம்மிடம் சொன்னார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+