கள்ளக்குறிச்சி விஏஓ தமிழரசியை ரூமில் பூட்டிய சங்கீதா.. "உன்னால முடிஞ்சதை பாரு".. ஓடிவந்த தாசில்தார்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி வரலாற்றிலேயே இப்படி ஒரு சம்பவம் இதுதான் முதல்முறையாக நடந்துள்ளது போலும்.. பணி மோதல் காரணமாக 2 பெண் அதிகாரிகளும் மோதிக்கொண்ட சம்பவம், பெரும் அதிர்ச்சியை தமிழகத்தில் ஏற்படுத்தி வருகிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் வடக்கனேந்தல் கிராமத்தில், தமிழரசி என்பவர் விஏஓ-வாக பணிபுரிந்து வருகிறார். இதே அலுவலகத்தில், கிராம நிர்வாக உதவியாளராக சங்கீதா என்பவர் பணியாற்றி வருகிறார்.

விஏஓ தமிழரசி: இந்நிலையில், நேற்று அதாவது டிசம்பர் 16ம் தேதி விஏஓ தமிழரசியை அலுவலகத்தில் வைத்து பூட்டு போட்டு பூட்டி விட்டு, கிராம நிர்வாக உதவியாளர் சங்கீதா சென்றுவிட்டாராம். இதனால், அதிர்ச்சி அடைந்த தமிழரசி, "கதவை பூட்ட வேண்டாம்" என்று அலறியிருக்கிறார்.. ஆனால், அவரது கதறலை துளிகூட தமிழரசி மதிக்காமல் சென்றாராம். இதனால், மேலும் ஆத்திரமடைந்த தமிழரசி, "இப்படி செய்தால், கடும் நடவடிக்கை எடுக்கச் செய்வேன்" என்று கூறியிருக்கிறார்..
பிறகு, "கதவைத் திறந்து விடு, இல்லாவிட்டால் தாசில்தாரிடம் சொல்லி நடவடிக்கை எடுக்க சொல்வேன்" என்று எச்சரித்திருக்கிறார். ஆனால், தமிழரசி இப்படி சத்தம் போட்டு கூப்பிட்டும்கூட, சங்கீதா அதனை மதிக்காமல், ஃபைல்களை எடுத்து கொண்டு, "உன்னால் முடிந்ததை பார்" என்று சொல்லிவிட்டு, தன்னுடைய பைக்கில் கிளம்பி சென்று விட்டார்.
வீடியோ காட்சி: இவையெல்லாம் வீடியோ காட்சிகளாக இணையத்தில் வைரலாகி பரபரப்பை கிளப்பி உள்ளது. சிறைபடுத்தப்பட்ட அறைக்குள் மாட்டிக்கொண்ட தமிழரசி, இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தொலைபேசி வாயிலாக தகவல் தெரிவித்துள்ளார்.. இதனைத் தொடர்ந்து தாசில்தாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.. அதற்கு பிறகே அரை மணி நேரம் கழித்து, சங்கீதா பூட்டை திறந்துவிட்டாராம்.
ஏற்கனவே, விஏஓ தமிழரசிக்கும், சங்கீதாவுக்கும் மோதல் போக்கு நிலவி வருகிறதாம். இவர்கள் 2 பேரும் அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபடுவது வழக்கமாக நடந்து வந்துள்ளது... இப்போது, உச்சக்கட்டமாக அறைக்குள் வைத்து சங்கீதா பூட்டிய சம்பவம் குறித்து, உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளாராம் தமிழரசி.
கோரிக்கைகள்: இந்த சம்பவம் கள்ளக்குறிச்சியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. எனினும், இதுபோன்ற செயலில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கிராம நிர்வாக உதவியாளர் சங்கீதா மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்..!!!
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications