கிராமங்களை தத்தெடுத்து மேம்படுத்த மீண்டும் பயணிப்பேன்- கமல் அறிவிப்பு
அடிப்படை வசதியில்லாத கிராமங்களை தத்தெடுத்து மேம்படுத்த மீண்டும் பயணம் செய்வேன் என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.
Recommended Video

மதுரை: கிராமங்களை தத்தெடுப்பது பற்றி கலந்து ஆலோசித்த பின்னர் மீண்டும் பயணம் செய்யப் போவதாக மக்கள் நீதி மய்யத்தின் நிறுவனர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் மதுரையில் நேற்று அரசியல் பயணத்தை ராமேஸ்வரத்தில் தொடங்கினார். மதுரையில் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் கட்சி கொடியை ஏற்றி வைத்து கட்சியின் பெயரை அறிவித்தார்.

மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், தனது கட்சியில் உள்ள கொடியை விளக்கினார். முதல் கட்டமாக தமிழகத்தில் அடிப்படை வசதிகள் இல்லாத 8 கிராமங்களை தத்தெடுக்க உள்ளதாகவும் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பின்னர் மீண்டும் பயணம் செய்ய உள்ளதாக கூறியுள்ளா கமல்ஹாசன்.
கட்சி கொடியில் உள்ள ஆறு கைகள் ஆறு மாநிலங்கள் என்றும், நட்சத்திரத்தின் எட்டு முனைகள் மக்களை குறிக்கும் என்றும் கூறினார்.
கமல் இன்று சென்னை திரும்பியதும் கிராமங்களை தத்தெடுப்பதற்கான ஆரம்ப கட்டப்பணிகள் தொடங்க உள்ளன. இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.
தமிழகம் முழுவதும் உள்ள தனது கட்சியின் நிர்வாகிகள் மற்றும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 16 உயர் மட்ட குழு உறுப்பினர்களுடன் கலந்து ஆலோசித்த பின்னர் இந்த 8 கிராமங்களும் தேர்வு செய்யப்பட உள்ளன. இந்த கிராமங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை தனது கட்சி சார்பில் முழுமையாக செய்து கொடுக்கவும் கமல் திட்டமிட்டுள்ளார்.
கிராமங்களை மேம்படுத்தினால் நகரங்கள் மேம்பாடு அடையும் என்பது கமலின் நம்பிக்கை எனவேதான் கிராமங்களை மேம்படுத்துவதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன? என்பது பற்றியும் கமல் ஆலோசனை நடத்த உள்ளார்.
-
திமுகவில் இருந்து தூக்கலாம்! மோடியை பார்த்ததும் புது தெம்பில் விஜய்! ஆதவ் அர்ஜுனாவுடன் அவசர மீட்டிங் -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்? -
எடப்பாடியை சந்திக்காத இரு துருவங்கள்! தவெக தலைமையுடன் சிவி சண்முகம், விஜயபாஸ்கர் ரகசிய ஆலோசனை? -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ் -
பனையூருக்கு பறக்கும் ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ்.. அடுத்தடுத்து தாவும் அதிமுக தலைகள்! சரிந்த ஜெ. கோட்டை! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
கர்நாடக முதலமைச்சராக தேர்வாகும் டி.கே.சிவக்குமார்.. பெங்களூரில் இன்று காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ்












Click it and Unblock the Notifications