இந்தக் கட்சி இன்னும் 4 தலைமுறை தாங்கும்! - கமல்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    மக்களின் கேள்விகளுக்கு கமல் அளித்த நச் பதில்கள் | Oneindia Tamil

    மதுரை: இந்தக் கட்சி (மக்கள் நீதி மய்யம்) இன்றும் 3 அல்லது 4 தலைமுறைகள் தாங்கும் என உறுதி அளித்துள்ளார் கமல் ஹாஸன்.

    மதுரையில் தனது புதிய கட்சியான மக்கள் நீதி மய்யத்தைத் அறிமுகப்படுத்தி கமல் ஹாஸன் பேசுகையில், "எங்கள் கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்து விட்டோம்.

    Kamal gives assurance to the life of the party

    என் வயதை கேலி செய்கிறார்கள், ஆயுள் குறைவாக உள்ள சிலர்.
    என் கட்சியின் கட்டமைப்பு பார்த்தால் தெரியும், என்னுடன் முடிவது அல்ல, குறைந்தது 3 அல்லது 4 தலைமுறை தாங்கும்

    அமைப்பு இது.

    பேச்சை குறைத்து செயலில் இறங்குவோம்.. மேலும் உங்களில் அனைவரும் என்னிடம் கேள்வி கேட்கலாம் ஒருவாரத்துக்குள் உங்கள் முகவரிக்கே பதிலை அனுப்பி வைப்பேன்," என்றவர், உதாரணமாக சில கேள்விகளுக்கு மக்கள் முன்னிலையில் பதில் அளித்தார்.

    "ஊழலை எப்படி ஒழிப்பீர்கள்?" என்ற கேள்விக்கு, "நான் மட்டுமல்ல நீங்களும் என்னோடு இணைந்து செயல்படணும்..

    " என்றார்.

    "ஆட்சிக்கு வந்தால் ஆண்களுக்கு குவாட்டரும் பெண்களுக்கு ஸ்கூட்டரும் கொடுப்பீர்களா?" என்ற கேள்விக்கு, "அதுக்கெல்லாம் அவசியமில்லை... உங்களை வசதிப்படுத்துவேன்," என்றார்.

    "தாய்க்குலத்துக்கு எதிரான கொடுமைகளுக்கு என்ன வழி?" என்ற கேள்விக்கு, "நான்தான் வழி", என தெரிவித்தார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+