For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்பு இல்லை.. கமல் ஆதங்கம்

By Veera Kumar
Google Oneindia Tamil News

Recommended Video

    11 ஆண்டுகளுக்கு பிறகு காவிரி விவகாரத்தில் அனைத்துக் கட்சி கூட்டம்- வீடியோ

    மதுரை: காவிரி தொடர்பாக நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு தன்னை அழைக்கவில்லை என்று கமல்ஹாசன் தெரிவித்தார்.

    மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் நேற்று தனிக்கட்சி துவங்கியுள்ளார் கமல்ஹாசன். இந்த நிலையில் மதுரையில் நிருபர்களிடம், இன்று கமல்ஹாசன் பேட்டியளித்தார். அப்போது அவரிடம் சென்னையில் இன்று நடைபெறும் அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு உங்களுக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளதா என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

    Kamal Haasan doesn't invite for Cauvery all party meetings

    அதற்கு பதில் அளித்து கமல் கூறுகையில், மக்கள் நீதி மய்யம் கட்சி ஆரம்பித்துள்ளேன். எனவே காவிரி விவகாரத்தில் தமிழக அரசு சார்பில் நடக்கும் அனைத்துக்கட்சிக் கூட்டத்துக்கு தன்னை அழைத்தால் நலம் என்றும் தெரிவித்தார்.

    காவிரி தொடர்பான அனைத்துக் கட்சி கூட்டத்தில் கலந்துகொள்ள தன்னை அழைக்கவில்லை என்று கமல்ஹாசன் தெரிவித்தார்.

    காவிரி விவகாரத்தில் தமிழக அரசு சார்பில் நடத்தப்பட்ட அனைத்துக்கட்சி கூட்டத்தில், திமுக, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள், பாஜக, காங்கிரஸ், நாம் தமிழர் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளுக்கும் அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Kamal Haasan said that he did not invite all party meetings in connection with Cauvery.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X