நேரில் உங்களை சந்திக்கும் போது கிடைக்கும் மகிழ்ச்சி டிவியில் கிடைப்பதில்லை- கமல்
Recommended Video

திருப்பூர்: நேரில் உங்களையெல்லாம் சந்திக்கும் இந்த மகிழ்ச்சி எனக்கு டிவியில் கிடைக்காது என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
மக்களை சந்திப்பதற்காக கமல்ஹாசன் இன்றைய தினம் திருப்பூர் மாவட்டத்துக்கு செல்கிறார் என்று கூறப்பட்டது இந்நிலையில் அவர் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள எல்லபாளையம் கிராமத்துக்கு சென்றார். செல்லும் வழியில் உள்ள நல்லதங்காள் ஓடையை பார்வையிட்ட கமல், எல்லம்பாளையத்தில் மரக்கன்றுகளை நட்டார்.
இவர் தத்தெடுத்த 8 கிராமங்களில் ஒன்று எல்லப்பாளையம் கிராமம் ஆகும். இவர் அங்கு மக்களிடம் பேசுகையில், என்ன வேண்டுமானலும் கொடுத்து, என்ன வேண்டுமானாலும் சொல்லி கூட்டத்தை கூட்டுவார்கள். ஆனால் இது அன்பால் சேர்ந்த கூட்டம்.

நேர்மையின் அடையாளம்
நான் உங்களை நம்பியே நாளை நமது என்று இருக்கிறேன். மக்கள் நீதி மய்யம் கட்சி எஞ்சியிருக்கும் நேர்மையின் அடையாளம் என்று நீங்கள் நம்புகிறீர்கள்.நான் மறுபடியும் வருவேன்.

மக்கள் கூட்டம்
உங்கள் அன்பிற்கு கடமைப்பட்டுள்ளேன். நேரில் உங்களையெல்லாம் சந்திக்கும் இந்த மகிழ்ச்சி எனக்கு டிவியில் கிடைக்காது. வெயிலில் நிற்கும் இந்த அன்பு உன்னதமானது. பிக்பாஸும் சினிமாவும் எனக்கு புகழைத் தேடித் தரலாம். ஆனால் நேரில் இங்கே வந்திருக்கும் இந்த மக்கள் கூட்டம் தான் எனக்கு அன்பை தருகிறது.

அரசியல்வாதிகளுக்கு
நான் மட்டும் தனியே எதுவும் செய்துவிட முடியாது. நீங்களும் என்னுடன் இணைந்து செய்ய வேண்டும். மாணவர்கள் அரசியல் புரிந்து கொள்வார்கள் என்று அரசியல்வாதிகளுக்கு பயம் வந்து விட்டது.

மறந்துவிடாதீர்
அதை சொல்வதற்காகவே இங்கு உங்கள் முன் வந்திருக்கிறேன். நாளைய பற்றிய சிந்தனையை மாணவர்கள் சிந்திக்க வேண்டும். நாளைய தமிழகத்தை உருவாக்கும் வலிமை உங்களிடம் இருக்கிறது அதை மறந்துவிடாதீர்கள் என்று கமல்ஹாசன் தெரிவித்தார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications