திராவிட ஹாசனே... பரம ஹாசனே....மதுரையை அதகளப்படுத்தும் கமல் 'தொண்டர்களின்' போஸ்டர்கள்
தனிக்கட்சி தொடங்கும் கமல்ஹாசனை வரவேற்று மதுரையை அதகளப்படுத்தியுள்ளனர் கமல் ரசிகர்கள்.
Recommended Video

மதுரை: தனிக்கட்சி தொடங்கும் நடிகர் கமல்ஹாசனை வரவேற்று திராவிட ஹாசனே, பரமஹாசனே என மதுரையை அதகளப்படுத்தியுள்ளனர் அவரது இன்றைய ரசிகர்கள்... நாளைய தொண்டர்கள்.
கமல்ஹாசன் நாளை மதுரையில் கட்சியைத் தொடங்குகிறார். ஒத்தக்கடையில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கட்சி பெயருடன் மாவட்ட செயலாளர்களையும் அறிவிக்கிறார்.
கமல்ஹாசன் ரசிகர்கள் திருவிழாவைப் போல இதை கொண்டாடி வருகின்றனர். மதுரையில் திரும்பிய திசையெங்கும் விதம் விதமான வாசகங்களுடன் போஸ்டர்களால் அதகளப்படுத்தி வருகின்றனர் அவரது ரசிகர்கள்.

பெரியார் படத்துடன் திராவிட ஹாசன்
தமது கொள்கையில் திராவிடம் இருக்கும் என கமல்ஹாசன் அறிவித்திருந்தார். இதைக் குறிக்கும் வகையில் திராவிட ஹாசனே என்ற அடைமொழியுடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

நம்மவரே.. பரமஹாசனே
அதேபோல பரமக்குடியில் பிறந்தவர் என்பதால் பரமஹாசனே என்கிற பட்டத்தையும் வழங்கியுள்ளனர் ரசிகர்கள். கமல்ஹாசனின் திரைப்படங்களை வைத்து நம்மவரே வருக என்பது போன்ற போஸ்டர்களும் ஒட்டப்பட்டிருக்கின்றன.

பெரியார், அம்பேத்கர், எம்ஜிஆர்
இந்த போஸ்டர்களில் பெரியார், அம்பேத்கர், பாரதியார், எம்ஜிஆர் என பலரது படங்களும் இடம்பெற்றுள்ளன. அதேபோல் சுவரெழுத்துகளிலும் அசத்தி வருகின்றனர் கமல்ஹாசனின் இன்றைய ரசிகர்களும் நாளைய தொண்டர்களும்.

மாற்று அரசியல்
அதேநேரத்தில் மாற்று அரசியலை பேசும் கமல்ஹாசன், போஸ்டர்கள், பேனர்களுக்கு அனுமதி கொடுத்திருக்கிறாரே என்கிற கருத்தும் முன்வைக்கப்படுகிறது. இருப்பினும் வழக்கமான அரசியல் கட்சிகளைப் போல மதுரையை தெறிக்க விடுகிறது கமல் போஸ்டர்கள்.











Click it and Unblock the Notifications