மதுரையில் பிறந்தது கமலின் புது கட்சி.. மக்கள் நீதி மய்யம்!
Recommended Video

மதுரை: மதுரை ஒத்தக்கடை மைதானத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கமல் தனது அரசியல் கட்சி பெயரை மக்கள் நீதி மய்யம் என்று அறிவித்தார்.
முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் வீட்டிலிருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கிய கமல்ஹாசன் அவரது நினைவிடத்துக்கு சென்று மரியாதை செலுத்தினார். பின்னர் திருமண மண்டபத்தில் மீனவர்களுடன் சந்திப்பு கூட்டம் நடத்தினார்.

அப்போது கமலை நம்பிக்கை நட்சத்திரமாக பார்ப்பதாக, மீனவ பிரதிநிதிகள் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து ராமநாதபுரத்தில் அரண்மனை முன்பு நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் மக்கள் வெள்ளத்தில் மிதந்த வந்த கமல், தான் சினிமா நட்சத்திரம் அல்ல, உங்கள் வீட்டு விளக்கு என்றார். மேலும் அதை பாதுகாப்பது உங்கள் கையில்தான் இருக்கிறது என்றும் கூறினார்.
பின்னர் மதுரைக்கு செல்லும் வழியில், சொந்த ஊரான பரமக்குடி மற்றும் சிவகங்கை மாவட்டம் மானாமதுரைக்கும் சென்றார். அங்கு அவர் பேசுவதற்காக மேடைகள் அமைக்கப்பட்டும் அவர் நேரமின்மை காரணமாக வேனிலேயே பேசினார்.
இதை தொடர்ந்து மதுரை வந்த கமல், அங்கு ஏற்கனவே வருகை தந்த டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலை வரவேற்றபடி, அவருடன் ஒத்தகடை மைதானத்தில் அமைக்கப்பட்ட பொதுக் கூட்டத்துக்கு வருகை தந்தார். கட்சிக் கொடியேற்றினார்.
மேடையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியில், கமல்ஹாசன் தனது கட்சி பெயரை மக்கள் நீதி மய்யம் என அறிவித்தார். இதையடுத்து கூட்டத்தில் பெரும் ஆரவாரம் எழுந்தது.
-
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சப்ஜெக்ட்டுக்கு உயிர் வந்துருச்சு.. திருச்சி கிழக்கில் கமலை இறக்குங்க! திடீரென குரல் கொடுக்கும் மநீம -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்!












Click it and Unblock the Notifications