மன்னிப்பு கேட்கிறவன் பெரிய மனுஷன் - சத்யராஜூக்கு கமல் பாராட்டு
பாகுபலி படத்திற்காக கன்னடர்களிடம் வருத்தம் தெரிவித்த நடிகர் சத்யராஜூக்கு , நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் பாராட்டு தெரிவித்துள்ளார்.
சென்னை: கர்நாடகாவில் 'பாகுபலி 2' வெளியீட்டில் எழுந்துள்ள சர்ச்சையைச் தொடர்ந்து வருத்தம் தெரிவித்த சத்யராஜின் பதிலுக்கு தமிழ் திரையுலகினர் வரவேற்பு தெரிவித்துள்ளார்கள். மன்னிப்பு கேட்கிறவன் பெரிய மனுஷன் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் கமல்ஹாசன் கருத்து கூறியுள்ளார்.

காவிரி பிரச்சினைத் தொடர்பாக தமிழ் திரையுலகம் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில், கன்னட அமைப்புகளை கடுமையாக சாடிப் பேசினார் சத்யராஜ். வாட்டாள் நாகராஜ் பற்றி விமர்சித்து பேசியது யுடுயூப்பில் இன்னமும் வைரலாகி வருகிறது.
Congrats Mr. Sathyaraj for maintaining rationality in a troubled environement. Quoting VirumaaNdi மன்னிப்புக் கேக்கறவன் பெரியமனுசன். Bravo
— Kamal Haasan (@ikamalhaasan) April 22, 2017
இந்த சூழ்நிலையில்தான் பாகுபலி 2 படம் இன்னும் சில தினங்களில் பல மாநிலங்களில் வெளியாக உள்ளது. இதில் சத்யராஜ் கட்டப்பாவாக நடத்துள்ளார்.
இப்பிரச்சினையை தற்போது கையில் எடுத்துள்ளன கன்னட அமைப்புகள். தன்னுடைய பேச்சுக்கு சத்யராஜ் மன்னிப்பு கேட்டால் மட்டுமே 'பாகுபலி 2' வெளியாகும் என்று கன்னட அமைப்புகள் தெரிவித்துள்ளன.
— Sibi (Sathya)raj (@Sibi_Sathyaraj) April 21, 2017
இப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தன்னுடைய நிலைப்பாடு குறித்து பேசி வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டார் சத்யராஜ். தன்னால் பிரச்சினை வரும் என்று தெரிந்தால் இனி தன்னை யாரும் ஒப்பந்தம் செய்ய வேண்டாம் என்றும் நடிகர் சத்யராஜ் கேட்டுள்ளார். இதற்கு தமிழ் திரையுலகினர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications