எல்லாம் சரி ஆண்டவரே! அந்த சேரி பிஹேவியர் பற்றி கேக்கவே இல்லையே!!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்று வரை காயத்ரியின் சேரி பிஹேவியர் கருத்துக்கு கமல் ஹாசன் கண்டனம் தெரிவிக்காதது ஏன்? என்று பொதுமக்கள் மத்தியில் கேள்வி உலவி வருகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆரம்பத்திலிருந்து கிட்டத்தட்ட வில்லியாகவே இருந்து வருபவர் காயத்ரி ரகுராம். இவர் போட்டியாளர்களை தரக்குறைவாக பேசுவது, உசுப்பி விடுவது, தேவையில்லாத விஷயத்தில் மூக்கை நுழைப்பது உள்ளிட்ட செயல்பாடுகளால் காயத்ரியை நெட்டிசன்களும், பொதுமக்களும் வசைபாடாத நாளே இல்லை என்று கூறலாம்.

சேரி பிஹேவியர்

சேரி பிஹேவியர்

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஓவியாவை சேரி பிஹேவியர் என்று காயத்ரி தெரிவித்த கருத்து தாழ்த்தப்பட்ட சமூகத்தினரிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் என்றெல்லாம் கோரிக்கைகள் வலுத்தன.

எதிர்ப்புகள் கிளம்பின

எதிர்ப்புகள் கிளம்பின

கமல்ஹாசனின் வீட்டுக்கு பாதுகாப்பு போடும் அளவுக்கு இந்த கருத்துக்கு அத்தகைய பின்விளைவுகள் கிளம்பின. கமலுக்கும் டுவிட்டர் மூலம் மக்கள் தங்கள் எதிர்ப்புகளை பதிவு செய்த வண்ணம் இருந்தனர்.

ரூ.100 கோடி நஷ்ட ஈடு

ரூ.100 கோடி நஷ்ட ஈடு

சமீபத்தில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி ரூ.100 கோடி நஷ்ட ஈடு கேட்டு கமலுக்கு எதிராக வழக்கு தொடுத்தார். மேலும் காயத்ரியை வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்தது.

ஓவியா வெளியேற்றம்

ஓவியா வெளியேற்றம்

ஓவியாவை தனிமைப்படுத்தியால் மன உளைச்சலுக்கு ஆளான அவர் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார். இது குறித்து தனித்தனியாக போட்டியாளர்களிடம் கமல் விளக்கம் கேட்டார். அப்போது காயத்ரி அடிக்கடி பயன்படுத்தும் ஹேர் வார்த்தைக்கு கண்டனம் தெரிவித்தார்.

இதற்கு ஏன்

இதற்கு ஏன்

ஹவுஸ்மேட்டுகளை தகாத வார்த்தையால் திட்டியதை பொறுத்துக் கொள்ளாமல் பட்டும் படாமல் காயத்ரியை கமல் கண்டித்தார். எனினும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கே வேட்டு வைக்கும் நிலைக்கு தள்ளப்பட்ட காயத்ரியின் சேரி பிஹேவியர் கருத்துக்கு கமல் கடிந்து பேசவில்லை. ஏதோ வழக்கை சந்திப்பேன் என்று மட்டும் கூறினார்.

கண்ணியம் காப்பர்

கண்ணியம் காப்பர்

தாழ்த்தப்பட்ட மக்களின் மனங்களை புண்படும் படி பேசியமைக்கு காயத்ரியை பகிரங்கமாக கண்டித்திருக்கலாம் என்றும் அப்போதுதான் பிரபலங்கள் பொது இடங்களில் பேசும்போதும் கண்ணியம் காப்பர் என்றும் பார்வையாளர்கள் கருதுகின்றனர். எது எப்படியோ ஜூலி வெளியேற்றப்பட்டது நினைத்து பார்வையாளர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Netisans asks that Why Kamal has not asked anything to Gayathri about her controversial comment.
Please Wait while comments are loading...