அரசியலுக்கு வர "இவருக்கு" மட்டும் தகுதியில்லையாம்... கூறுவது எச்.ராஜா

தமிழகத்தில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். ஆனால் நடிகர் கமல்ஹாசன் அரசியலுக்கு வர தகுதியில்லாதவர் என்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    அடடா.. எச் ராஜாவுக்கு இப்படி ஒரு ராசியா? மரண பங்கம்- வீடியோ

    சென்னை: தமிழகத்தில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். ஆனால் நடிகர் கமல் அரசியலுக்கு வர தகுதியில்லாதவர் என்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா விமர்சித்துள்ளார்.

    தமிழகத்தில் ஊழல் மலிந்து விட்டது என்று நடிகர் கமல் தனது செய்தியாளர்கள் சந்திப்பின் போது தெரிவித்திருந்தார். இதற்கு தமிழக அமைச்சர்கள் கமலை கண்டபடி விமர்சித்தனர்.

    இந்த டுவீட் குறித்து சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எச். ராஜா, அரசின் மீது நடிகர் கமலஹாசன் மட்டும் இல்லை. ஒவ்வொரு குடிமகனுக்கும் விமர்சிக்கும் உரிமை உள்ளது. கமல் ஒரு முதுகெலும்பே இல்லாத கோழை. முதுகெலும்பு அற்றவர் முதல்வராக ஆசைப்படக்கூடாது என்றும் எச். ராஜா கூறியிருந்தார்.

    Kamal hassan is not eligible for politics, says H.Raja

    எச்.ராஜா முதுகெலும்பு வல்லுனர் என்றும் பதில் பதிவிட்டார் கமல். இதற்கு பாஜக தலைவர் எச்.ராஜா பதிலளிக்கையில், அரசியலுக்கு வர கமல்ஹாசனுக்கு உரிமை உண்டு என்றார்.

    முடிவெடுத்தால் முதல்வர் என்ற வரிக்குதான் நான் எதிர்த்தேன். பிரச்சனை என வரும்போது ஓடிப் போய்விடுவார் கமல். இன்னும் சொல்ல போனால் முதுகெலும்பு இல்லாத கோழை அவர்.

    கமல் ஒரு இந்து விரோதி என்பதால் எதிர்க்கிறேன். வக்கிரமாக பேசக் கூடியவர். மேலும் ஒழுக்கமே இல்லாத வாழ்க்கையை உயர்ந்த வாழ்க்கை என்று கருதுபவர். மொத்தத்தில் தலைவருக்கான தகுதியே இல்லாதவர் என்று தெரிவத்தார் எச். ராஜா.

    இந்நிலையில் மெர்சல் பிரச்சினை குறித்தும், கமலின் அரசியல் பிரவேசம் குறித்தும் எச்.ராஜா கூறுகையில், தவறான கருத்தை திரைப்படத்தில் பதிவு செய்யும்போது கருத்து சொல்ல எனக்கு உரிமை உள்ளது. நடிகர் கமல் அரசியலுக்கு வரவேண்டாம் எனக் கூறவில்லை, முதல்வராக தகுதி வேண்டும் என்று பாஜக தேசிய செயலாளர் ஹச். ராஜா கூறியுள்ளார்.

    கடந்த ஜூலை மாதம் முதலே கமலுக்கும் எச். ராஜாவிற்கும் நடிகர் கமலுக்கும் ஏழாம் பொருத்தமாகவே இருக்கிறது. ட்விட்டரில் மட்டுமே களமாடிவந்த கமல் இப்போது களத்திலும் இறங்கிவிட்டார். இது குறித்து கருத்து கூறியுள்ள எச். ராஜா, நடிகர் கமல் அரசியலுக்கு வரவேண்டாம் எனக் கூறவில்லை, முதல்வராக தகுதி வேண்டும் என்று கூறியதாக தெரிவித்துள்ளார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+