இந்து தீவிரவாதம் குறித்த கமல் கருத்து.. பாஜக, சிவசேனை கடும் எதிர்ப்பு! மன்னிப்பு கேட்க வலியுறுத்தல்
Recommended Video

சென்னை: இந்து தீவிரவாதம் இல்லை என இனிமேல் சொல்ல முடியாத அளவுக்கு தீவிரவாதம் பரவியுள்ளது என்று நடிகர் கமல்ஹாசன் வார இதழ் ஒன்றில் எழுதிய கட்டுரை, பாஜக, சிவசேனை கட்சியினரை கோபமடையச் செய்துள்ளது.
தனது கருத்துக்கு, கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியுள்ளது.
கமல் தனது கட்டுரையில் "எங்கே ஓர் இந்துத் தீவிரவாதியைக் காட்டுங்கள்? என்ற சவாலை இனி அவர்கள் (இந்துக்கள்) விட முடியாது. அந்த அளவுக்கு அவர் கூட்டத்திலும் தீவிரவாதம் பரவியிருக்கிறது.." என்று குறிப்பிட்டுள்ளார்.

மன்னிப்பு கேளுங்க
இதுகுறித்து, பாஜக செய்தித்தொடர்பாளர் நாராயணன் திருப்பதி ஆங்கில செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில், "கமல்ஹாசன் இதற்காக மன்னிப்பு கேட்பதோடு தனது வார்த்தைகளை திரும்ப பெற வேண்டும். நிஜம் என்னவென்றால், இங்கு இந்துக்கள் பெரும்பான்மையின மக்களாக இருப்பதால்தான் அமைதி நிலவுகிறது" என்று தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கதிதான் கமலுக்கு
சிவசேனை செய்தித்தொடர்பாளர் மனிஷா கயண்டே கூறுகையில், "இதுபோன்ற குற்றச்சாட்டுகள் அரசியலுக்கு உதவாது. இந்து தீவிரவாதம் என்று பேசியதால்தான் காங்கிரஸ் இன்று அதிகாரத்தில் இருந்து அகற்றப்பட்டுள்ளது" என்று கூறியுள்ளார்.

திராவிட கொள்கையாளர்களை ஈர்க்கவா?
இதுகுறித்து அரசியல்விமர்சகரும், பத்திரிகையாளருமான ஆர்.கே.ராதாகிருஷ்ணன் டிவி சேனலுக்கு அளித்த பேட்டியில், "இந்துத்துவாவுக்கு எதிரான எண்ணம் கொண்ட கணிசமான தமிழக மக்களிடம் அபிமானம் பெறும் முயற்சியில் கமல் ஈடுபட்டிருக்கலாம் என தோன்றுகிறது" என்று கூறியுள்ளார். அதிமுக, திமுக மீது நம்பிக்கை இல்லாத கணிசமான மக்களை ஈர்க்க கமல் இவ்வாறு கூறியிருக்கலாம் என்று கூறுகிறார் அவர்.

நடிகர்களுடன் தொடர் மல்லுக்கட்டு
மெர்சல் திரைப்படத்தில் மத்திய அரசின் சில சமீபத்திய அறிவிப்புகளுக்கு எதிராக வசனம் பேசப்பட்டு அதை பாஜக தலைவர்கள் எதிர்த்த சர்ச்சை இப்போதுதான் அடங்கியுள்ளது. இந்த நிலையில் கமல்ஹாசன் கருத்தும், பாஜக தலைவர்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications