காவிரி பிரச்சினையை திசை திருப்பவே எச் ராஜாவின் கலக பேச்சு: கமல் குற்றச்சாட்டு
காவிரி பிரச்சினையை திசை திருப்பவே எச் ராஜா இதுபோல் பேசியுள்ளதாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்.
Recommended Video

சென்னை: காவிரி பிரச்சினையை திசை திருப்பவே எச் ராஜா பெரியார் குறித்து கண்டனத்துக்குரிய கருத்துகளை பதிவு செய்துள்ளதாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்.
பெரியார் சிலைகள் உடைத்தெடுக்கப்படும் என்று எச் ராஜா கூறிய கருத்து தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் அவர் கொடுக்கும் விளக்கத்தை பார்க்கும் போது எரியும் தீயில் நெய் ஊற்றியது போல் உள்ளது.
தமிழகத்தில் திராவிட கட்சிகள் அனைத்தும் எச் ராஜாவை கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் இன்று ஆழ்வார்பேட்டையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்தார்.

திரும்ப பெற முடியாது
அப்போது அவர் கூறுகையில் பெரியார் சிலையை யாரும் தொட்டுவிட முடியாது. கலக வார்த்தைகள் ஏன் பேசப்படுகிறது என்பதை தமிழர்கள் உணர வேண்டும்.ஹெச். ராஜாவின் வார்த்தை அம்பு போன்றது. திரும்ப பெற முடியாது.

மன்னிப்பு கேட்க வேண்டும்
எச் ராஜா பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். பெரியார் சிலைக்கு போலீஸ் காவல் எல்லாம் வேண்டாம் சிலைகளையும் கவுரவத்தையும் தமிழர்கள் பார்த்து கொள்வர்.

வருத்தம் தெரிவித்ததை என்னால் ஏற்க முடியாது
காவிரி பிரச்சனையை திசை திருப்ப எச். ராஜா முயற்சி செய்துள்ளார். தமது செயலுக்கு எச். ராஜா வருத்தம் தெரிவித்தது போதாது. எச் ராஜா வருத்தம் தெரிவித்ததை என்னால் ஏற்க முடியாது.

பிரச்சினை எழுந்தது
தமக்கு தெரியாமல் பதிவு என எச்.ராஜா கூறுவது நொண்டி சாக்கு சொல்கிறார். காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை உள்ள சூழலில் இந்த பிரச்சினை எழுந்துள்ளது.

தமிழகம் திசைத்திரும்ப கூடாது
இது மத்திய அரசின் தூண்டுதலா என்று கேட்கிறீர்கள். அப்படியும் இருக்கலாம். ஆனால் மத்திய அரசு அந்த கருத்தை ஏற்றுக் கொள்ளவில்லை என்று கூறுகிறது. காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையிலிருந்து தமிழகம் திசை திரும்பிவிடக் கூடாது.

ஊடகங்களும்...
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான கெடு முடிந்து கொண்டிருக்கிறது. அதிலிருந்து தமிழர்கள் திசை திரும்பாமல் இருக்க வேண்டும். ஊடகத்தினரும் திசை திரும்பாமல் இருக்க வேண்டும். ரஜினி எம்ஜிஆர் ஆட்சியை தந்தால் என்னால் மக்களாட்சியை தர முடியும் என்றார் கமல்ஹாசன்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications