நடிகர் கமல்ஹாசன் அதிகமாகவும் அநாகரீகமாகவும் பேசுகிறார்.. சொல்கிறார் பவர் ஸ்டார்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  கமலுக்கு எதிராக ஆர்.கே.நகர் மக்கள் போராட்டம்- வீடியோ

  சென்னை: நடிகர் கமல்ஹாசன் அதிகமாகவும் அநாகரீகமாகவும் பேசுகிறார் என நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

  வாரபத்திரிக்கை ஒன்றில் கட்டுரை எழுதி வரும் நடிகர் கமலஹாசன் சமீபத்தில் நடந்து முடிந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தொடர்பாக எழுதியுள்ளார். அதில் வாக்காளர்களை பிச்சைக்காரர்கள் எனவும் வேட்பாளரை திருடன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

  இதற்கு டிடிவி தினகரனின் ஆதரவாளர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். நடிகர் கமல்ஹாசன் தங்களை இழிவுப்படுத்துவதாக கூறி ஆர்கே நகர் தொகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  கமலை சாடும் பவர்

  கமலை சாடும் பவர்

  நடிகர் கமலை கண்டித்து தினகரனின் ஆதரவாளர்கள் அவரது கொடும்பாவியை எரித்து போராட்டம் நடத்தினர். இந்நிலையில் திரைப்பட வர்த்தக கருத்தரங்கில் பேசிய நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் நடிகர் கமல்ஹாசனுக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளார்.

  அநாகரீகமாக பேசுகிறார்

  அநாகரீகமாக பேசுகிறார்

  நடிகர் கமல்ஹாசன் ஆர்.கே.நகர் மக்களை அவமானப்படுத்தியுள்ளார் பவர் ஸ்டார் சீனிவாசன் தெரிவித்துள்ளார். கமல்ஹாசன் அதிகமாகவும், அநாகரீகமாகவும் பேசுகிறார் என்றும் அவர் கூறினார்.

  சினிமா வட்டாரத்தில் பரபரப்பு

  சினிமா வட்டாரத்தில் பரபரப்பு

  ரஜினியின் அரசியல் பயணத்தை மக்கள் முடிவு செய்வார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். நடிகர் கமல்ஹாசன் குறித்து பவர் ஸ்டார் சீனிவாசன் பேசியிருப்பது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  பம்மிக்கொண்டு எடுத்த போட்டோ

  பம்மிக்கொண்டு எடுத்த போட்டோ

  இதனிடையே அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் கமல்ஹாசனுடன் பவர் ஸ்டார் சீனிவாசன் பம்மிக்கொண்டு எடுத்த போட்டோ வைரலாகியுள்ளது. பவர் ஸ்டார் சீனிவாசன் பெங்களூரு உட்பட பல்வேறு காவல்நிலையங்களில் மோசடி புகார்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

  பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! தமிழ் மேட்ரிமோனி

  English summary
  Actor Power star Srinivasan slams Actor Kamalhaasan on the talk of RK Nagar people. Power start says that Kamal Hassan speaks highly and indecently. Kamal haasan has insulted the RK Nagar people He says further.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற