அரசியல் "அரங்கேற்றம்" குறித்து விரைவில் பிரஸ்மீட் - கமல்ஹாசன் தகவல்
சென்னை: அரசியல் பிரவேசம் குறித்து தனியா பிரஸ் மீட் வைக்கிறேன் என்று நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
கமல்ஹாசன் ஒவ்வொரு அசைவும், மொழியும் மக்களால் கவனிக்கப்படுகிறது. மாலை வந்து விட்டால் கமல் டிவிட்டர்ல என்ன போட்டிருக்கிறார் என்று மக்கள் எதிர்பார்க்க ஆரம்பித்து விடுகிறார்கள். பிறகு இரவெல்லாம் அதுவே பேச்சாகி பொழுது விடிந்து விடுகிறது.

அவர் அரசியலுக்கு வருவாரா இல்லையா என்ற விவாதம் ஒரு பக்கம் சூடு பிடித்துள்ளது. இந்த நிலையில் நேற்று மாலையில் சென்னையில் நடந்த தமிழ் தலைவாஸ் புரோ கபாடி அணி சீருடை அறிமுக விழாவில் கமல்ஹாசன் கலந்து கொண்டார். அவரது பேச்சுதான் அனைவரின் எதிர்பார்ப்பாகவும் இருந்தது. நினைத்தது போலவே, ஒருவையில் பேசுவோருக்கு மத்தியில் தலைவாஸ் என்று பெயர் வைத்தது சிறப்பு என்று கூறி அரசியலை தொட்டுச் செல்ல கமல் தவறவில்லை.
நிகழ்ச்சிக்குப் பின்னர் டிடிநெக்ஸ்ட் செய்தியாளருக்கு கமல் அளித்த ஒரு பேட்டியின்போது அரசியல் பிரவேசம் குறித்து கேட்டபோது, அதைப் பற்றிப் பேச இது இடமல்ல, நேரமல்ல. அதுகுறித்து விரைவில் தனியாக பிரஸ் மீட் வைப்போம் என்று கூறிச் சென்றார்.
இந்த பேச்சு இப்போது புதிய பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இன்று மாலை டிவிட்டரில் என்ன வரப் போகிறதோ என்ற எதிர்பார்ப்பும் பல மடங்கு அதிகரித்துள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications