அரசியலில் ‘ஏ’ வில் உள்ள கமல்ஹாசன் ‘பி’ க்கு வர பல காலமாகும்.. சொல்கிறார் "ஜெ"!
அரசியலில் ‘ஏ’ வில் உள்ள கமல்ஹாசன் ‘பி’ க்கு வர பல காலமாகும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: அரசியலில் 'ஏ' வில் உள்ள கமல்ஹாசன் 'பி' க்கு வர பல காலமாகும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் போராட்டத்தால் தமிழகத்தில் பல போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போராட்டங்களால் சென்னை மாநகர் ஸ்தம்பித்தது.
இதனால் பொதுமக்கள் பெரும் அவதியடைந்தனர். இந்நிலையில் சென்னை பட்டினப்பாக்கத்தில் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசினார்.

ஆதிகாலத்திற்கு திரும்பிவிட்டதா?
அப்போது திமுகவினர் கற்களை வீசி தாக்குதல் நடத்தியதற்கு அவர் கண்டனம் தெரிவித்தார். கல் எறியும் காலத்திலா திமுக உள்ளது? என்ற அவர், ஆதிமனிதர்கள் தான் கல்லை பயன்படுத்தினார்கள் திமுக ஆதி காலத்திற்கு திரும்பி விட்டதா? என்றார்.

அரசியல் ஆதாயம்
காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். காவிரி விவகாரத்தில், ஸ்டாலின் அரசியல் ஆதாயம் தேடுகிறார் என்றும் அவர் கூறினார்.

அவசர ஊர்திக்கூட
பல முறை முயற்சி செய்தும் ஆட்சியை கலைக்க முடியாததால் தற்போது ஸ்டாலின் காவிரி பிரச்னையை கையில் எடுத்துள்ளார் என்றும் அவர் குற்றம்சாட்டினார். உண்ணாவிரதம் உள்ளிட்ட ஜனநாயக வழி போராட்டங்களுக்கு ஆதரவு உண்டு என்ற அவர், அவசர ஊர்திக்கூட செல்லமுடியாத அளவுக்கு திடீரென மறியல் செய்வது முறையல்ல என்றார்.

அரசியல் அப்பரன்டிஸ்
கமல் ஒரு அரசியல் அப்ரன்டிஸ் என்ற ஜெயக்குமார்,
அரசியலில் அப்பரண்டீஸாக உள்ள கமல்ஹாசன், இன்னும் நிறைய விஷயங்களை தெரிந்துகொள்ள வேண்டும் என்றார்.

நாங்கள் அரசியலில் ஹீரோ
கமல் ஒரு ஓய்வுபெற்ற ஹீரோ என்றும் நாங்கள் அரசியலில் ஹீரோ என்றும் அவர் கூறினார். மேலும் அரசியலில் ‘ஏ' வில் உள்ள கமல்ஹாசன் ‘பி' க்கு வர பல காலமாகும் என்றும் ஜெயக்குமார் தெரிவித்தார்.
-
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா? -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர்












Click it and Unblock the Notifications