For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விசில் செயலியில் வந்த கடல்சீற்ற புகார்.. பட்டினப்பாக்கம் மீனவ மக்களை நேரில் சந்தித்த கமல்

மக்கள் நீதி மய்யத்தின் விசில் செயலியில் வந்த புகாரின் அடிப்படையில் பட்டிணம்பாக்கம் பகுதியில் கடல் சீற்றத்தால் பாதிக்கப்பட்ட மீனவ மக்களை சந்தித்து கமல்ஹாசன் ஆறுதல் அளித்தார்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

சென்னை: மக்கள் நீதி மய்யத்தின் விசில் செயலியில் வந்த புகாரின் அடிப்படையில் பட்டிணம்பாக்கம் பகுதியில் கடல் சீற்றத்தால் பாதிக்கப்பட்ட மீனவ மக்களை சந்தித்து கமல்ஹாசன் ஆறுதல் அளித்தார்.

சென்னை பட்டிணம்பாக்கம் பகுதியில் அடிக்கடி கடல் சீற்றம் ஏற்பட்டு வருகிறது. அந்த பகுதியில் சீனிவாச புரத்தில் நிறைய மீனவ மக்கள் வசித்து வருகிறார்கள். இதனால் சீனிவாசபுரத்தில் கடல் சீற்றத்தால் வீடுகள் இடிந்து விழுவது நடக்கிறது.

Kamal meets Pattinapakkam fishing families after got a complaint in Whistle App

இதனால் பொதுமக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். ஆனால் இதுவரையில் எந்த அதிகாரிகளும் வந்து மக்களை சந்திக்கவில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனே வந்து நடவடிக்கை எடுக்குமாறு பல முறை கோரிக்கை வைத்தும் யாரும் மக்களை வந்து சந்திக்கவில்லை.

Kamal meets Pattinapakkam fishing families after got a complaint in Whistle App

இந்த நிலையில் அந்த மீனவ மக்களை இன்று மக்கள் நீதி மய்யம் சார்பில் சென்று கமல்ஹாசன் சந்தித்தார். கமலுக்கு மக்கள் நீதி மய்யத்தின் விசில் செயலியில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Kamal meets Pattinapakkam fishing families after got a complaint in Whistle App

அதில் வந்த புகாரின் பேரில், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் பாதிப்படைந்த இடங்களை நேரில் சென்று பார்வையிட்டார். இந்த பிரச்சனையை அரசிடம் கொண்டு செல்வேன் என்றும், விரைவில் இதற்கு தீர்வு காணப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

English summary
Kamal meets Pattinapakkam fishing families after got a complaint in Whistle App.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X