பொன்னாடையில்லை... மாலையில்லை... கமல் கட்டிப்பிடி வைத்தியம்
கமல் கூட்டத்தில் பொன்னாடையில்லை... மாலையில்லை... தன்னையே ஆடையாக்கி கட்டிப்பிடி வைத்தியம் மட்டுமே செய்தார் கமல்.
Recommended Video

மதுரை: கட்சி ஆரம்பித்து அரசியல் களத்தில் அடியெடுத்து வைத்து விட்டார் கமல்ஹாசன். கழுத்தில் ஆள் உயர மாலை போடவில்லை. பொன்னாடைகள் குவியவில்லை பதிலுக்கு தன்னையே பொன்னாடையாக்கி கட்டிப்பிடித்து விட்டார் கமல்.
அரசியல் கட்சி என்றாலே மாலைகளும், பொன்னாடைகளும் அதகளப்படும். மாலை விற்பனை செய்பவர்கள் காட்டில் மழைதான். ஜவுளிக்கடைகளில் பொன்னாடைகள் விற்பனை அமோகமாக இருக்கும்.

மதுரையில் கமல் கட்சியை அறிவிக்கப் போகிறார் என்று கூறிய உடனேயே பூ மாலை விற்பனையாளர்களும், பொன்னாடை விற்பனையாளர்களும் உற்சாகமடைந்தனர். ஆனால் தனது கட்சிக் கூட்டத்தில் எதையுமே கொண்டுவர விடவில்லை கமல்ஹாசன்.
ராமேஸ்வரத்தில் மீனவர்கள் மத்தியில் பேசிய கமல்ஹாசன், பொன்னாடைக்கு பதிலாக தன்னையே ஆடையாக்கி போர்த்துவதாக கூறி கட்டிப்பிடித்தார். இது வசூல் ராஜா எம்பிபிஎஸ் படத்தில் கமல் அறிமுகம் செய்த கட்டிப்பிடி வைத்தியமாகும்.
மாற்று அரசியல் என்று கூறி வரும் கமல், தனது அரசியல் பயணத்தில் முதன் முறையாக நிர்வாகிகளை கவுரவப்படுத்துவதில் மாற்று முறையை கையாண்டார். மதுரையில் மேடையில் நிர்வாகிகளை அறிமுகம் செய்து வைத்து பேசிய கமல்ஹாசன், அவர்களை கட்டிப்பிடித்தார்.
இது ராமபிரான் தனது பக்தர் அனுமனை ஆலிங்கனம் செய்து ஏற்றுக்கொண்டதைப் போன்றது என்று அவரது ரசிகர்கள் உற்சாகத்தோடு கூறி வருகின்றனர். எது எப்படியோ கமல் கட்சியில் சேரும் பெண் நிர்வாகிகள் இதை எப்படி எடுத்துக்கொள்வார்களோ தெரியலையே.
-
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ் -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
பனையூருக்கு பறக்கும் ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ்.. அடுத்தடுத்து தாவும் அதிமுக தலைகள்! சரிந்த ஜெ. கோட்டை! -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
குதிரை பேரம் இல்லை, கற்பனை! அதிமுகவை தவெக உடைத்ததா? விஜய்க்கு ஆதரவாக ஐயுஎம்எல் காதர் மொய்தீன் பேச்சு -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
கமல் கோரிக்கையை நிராகரித்த விஜய்.. மேஜைக்கு வந்த 6 எச்சரிக்கை ரிப்போர்ட்.. உள்ளே இருந்தது என்ன? -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
எடப்பாடியை சந்திக்காத இரு துருவங்கள்! தவெக தலைமையுடன் சிவி சண்முகம், விஜயபாஸ்கர் ரகசிய ஆலோசனை?












Click it and Unblock the Notifications