சபாஷ்.. கட்சி பேருக்காகவே கமலை எழுந்து நின்று பாராட்ட வேண்டும்!
Recommended Video

சென்னை: போலித்தனம் இல்லாத ஒரு சுத்தமான மாற்றத்தை அதிரடியாக கொடுத்திருக்கிறார் கமல்ஹாசன். கட்சிப் பெயரிலேயே அவர் புதுமையை புகுத்தி விட்டார்.
கழகம், திராவிடம், தேசியம் என்று ஊறி ஊறி அமிழ்ந்து போன தமிழக மக்களுக்கு கண்டிப்பாக இந்த பெயர் புரியாதுதான். ஆனால் மக்களை வழக்கமான கட்சிகளைப் போல ஏமாற்றாமல் பளிச்சென மனதில் பட்ட பெயரை, மக்களை உள்ளடக்கிய பெயரை வைத்துள்ள கமல்ஹாசன் எழுந்து நின்று பாராட்டப்பட வேண்டியவர்.

கழகம் என்று பெயர் வைக்காமல் எந்தக் கட்சியும் இங்கு பிறப்பதில்லை. கூடவே திராவிடம் இருக்கும் அல்லது தேசியம் இருக்கும். திராவிடம், தேசியம் என இரண்டையும் போட்டுக் குழப்பி பெயர் வைத்த கட்சியும் இங்கு உண்டு.
ஆனால் இதெல்லாம் மக்களுக்குச் சம்பந்தமில்லாதவை என்று ஒதுக்கி புறம் தள்ளி தூக்கிப் போட்டிருக்கிறார் கமல். துணிச்சல் தேவை இதற்கு. திராவிடம் என்று சொல்லி வரும் அவர் அந்தப் பெயரை கட்சியில் சேர்க்காமல் விட்டதிலேய அவரது தைரியம் புரிந்து போயிருக்கும் அனைவருக்கும்.
தமிழக மக்களுக்கு இந்த புதுமை அவசியமானது. காரணம் மாற்றம் இதிலிருந்து தொடங்குவதாக எண்ணிக் கொள்ளலாம். மாற்றத்தை எதிர்நோக்கியுள்ள மக்களுக்கு, வழக்கமான கட்சியாக இது செயல்படாமல் வித்தியாசமான கட்சியாக, மக்களுக்கான கட்சியாக செயல்படக் கூடிய வாய்ப்புகள் தனது கட்சியில் அதிகம் என்பதையும் கமல்ஹாசன் கோடிட்டுக் காட்டியுள்ளார்.
மொத்தத்தில் கமல்ஹாசன் கட்சிப் பெயர் யாரும் எதிர்பாராதது.. ஆனால் பெரும் பாராட்டுதல்களுக்குரியது.. !
-
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்!












Click it and Unblock the Notifications