"சேரி பிஹேவியர்".. காயத்ரி பேச்சுக்கு மன்னிப்பு கேட்க கமல் மறுப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சேரி பற்றி காயத்ரி பேசியதை நான் எழுதி தரவில்லை என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். நான் எழுதி கொடுத்ததை அவர் சொல்லியிருந்தார் நான் மன்னிப்பு கேட்டிருப்பேன் என்றும் அவர் கூறினார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள நடிகையும் நடன இயக்குநருமான காயத்ரி ரகுராம் , சக போட்டியாளரை சேரி பிகேவியர் என கூறினார். சாதிய ரீதியில் அவர் பேசியது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Kamal said that he did give the script for Gayathri's speech about Chery behavior

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி மீதான புகார் குறித்து விளக்கம் அளித்த நடிகர் கமல்ஹாசன், சேரி பற்றி காயத்ரி பேசியதை நான் எழுதி தரவில்லை என்றார். மேலும் நான் எழுதி கொடுத்ததை அவர் சொல்லியிருந்தால் நான் மன்னிப்பு கேட்டிருப்பேன் என்றும் கமல் கூறினார்.

பிக்பாஸ் வீட்டுக்குள் நடப்பதற்கு நான் பொறுப்பு கிடையாது என்றும் கமல்ஹாசன் திட்டவட்டமாக தெரிவித்தார். நான் நடித்த முத்தக்காட்சியால் கெடாத கலாசாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியால் கெடுமா? என்றும் நடிகர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பினார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Kamal said that he did not give the script for Gayathri's speech about Chery behavior. he said i would have been appologised if i write that script.
Please Wait while comments are loading...