Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மறக்க முடியுமா.. இந்திய சினிமாவை கட்டுக்குள் வைத்திருந்த கமல்-ஸ்ரீதேவி ஜோடி!

ஸ்ரீதேவியும், கமல்ஹாசனும் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆகி பெரிய அளவில் வளர்ந்தவர்கள்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    மயிலும் சப்பாணியும் கடைசியாக சந்தித்த தருணங்கள்- வீடியோ | Oneindia Tamil

    சென்னை: ஸ்ரீதேவியும், கமல்ஹாசனும் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆகி பெரிய அளவில் வளர்ந்தவர்கள். திரையுலகில் இவர்கள் எட்டாத உயரமே இல்லை என்று கூட சொல்லலாம்.

    ஸ்ரீதேவி துபாயில் மாரடைப்பினால் மரணமடைந்தார். 54 வயதாகும் ஸ்ரீதேவி துபாயில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற இடத்தில் உயிரிழந்துள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்து இருக்கிறார்கள். அதே போல் சக நடிகர்கள், நடிகைகளும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    குழந்தை

    குழந்தை

    இந்திய சினிமாவில் குழந்தை நட்சத்திரங்கள் பெரிய நபராக மாறிய பின் நடிக்க வருவது இயல்பு. ஆனால் இதில் சிலர் மட்டுமே வென்று இருக்கிறார்கள். ஆனால் யாரும் கமல், ஸ்ரீதேவி அளவிற்கு வெற்றியை குவிக்கவில்லை. தன் நடிப்பால் விந்திய மலையின் இருபக்கத்தையும் இணைத்தவர் ஸ்ரீதேவி, ஆஸ்காருக்கு பலமுறை பரிந்துரை ஆகி தமிழ் சினிமாவை உலகறிய செய்தவர் கமல்ஹாசன்.

    கமல்

    கமல்

    கமல் 1960ல் தமிழ்த் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக‌ அறிமுகம் ஆனார். களத்தூர் கண்ணம்மா மூலம் சினிமா உலகில் பெரிய நபராக மாறினார். இரண்டே வருடங்களில் மலையாள திரையுலகிலும் அறிமுகம் ஆனார். பின் அடுத்தடுத்த வருடங்களில் கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் அறிமுகம் ஆனார்.

    ஸ்ரீதேவி அறிமுகம்

    ஸ்ரீதேவி அறிமுகம்

    ஸ்ரீதேவியும் அதேபோல்தான் 1969ல் துணைவன் என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக முருகன் வேடமிட்டு அறிமுகம் ஆனார். சரியாக கமல் வந்து 9 வருடங்கள் கழித்து அறிமுகம் ஆகியுள்ளார். அதேபோல் இவரும் அதற்கு அடுத்த வருடமே மலையாள சினிமாவில் நடிக்க தொடங்கினார். அந்த வருடம் 8 கேரளா அரசு விருதுகள் வாங்கினார்.

    கலக்கினார்

    கலக்கினார்

    அதன்பின் இவர்கள் ஒன்றாக இணைத்தும் நடிக்க ஆரம்பித்தனர். மூன்று முடிச்சு படத்தில் ஒன்றாக இணைத்து நடித்தனர். அதன்பின் வரிசையாக பல்வேறு மொழிகளில் நடிக்க ஆரம்பித்தனர். பின் பாலிவுட்டுக்கு சென்ற பின் ஸ்ரீதேவி தமிழில் நடிப்பது குறைந்து போனது. இருவரும் இணைந்து மொத்தமாக 24 படங்கள் நடித்து இருக்கிறார்கள்.

    என்ன ஒற்றுமை

    என்ன ஒற்றுமை

    வயது திறமை மட்டும் இல்லாமல் மற்ற விஷயங்களிலும் இவர்களிடம் ஒற்றுமை இருக்கிறது. இருவருமே தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்து இருக்கிறார்கள். அதேபோல் இருவரும் அதிக பிலிம் பேர் விருதுகள் வாங்கியுள்ளனர். மேலும் இருவரும் பத்மஸ்ரீ விருது வாங்கியுள்ளனர்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+