கமல்ஹாசன் அவர்களே.. குமாரசாமி முடியாது என்றாலும் கூட கபிணி அணையின் மதகுகள் திறந்திருக்கும்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இயற்கையே கபிணி அணையின் மதகுகளை திறந்து விட்டுள்ளது. ஆனால் கர்நாடக முதல்வர் குமாரசாமிதான் கபிணி அணையைத் திறந்து விட்டதாக கூறி அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார் கமல்ஹாசன்.

குமாரசாமி முடியாது என்று கூறியிருந்தாலும் கூட, அணையின் மதகுகளை திறக்க மாட்டோம் என்று கூறினாலும் கூட இயற்கையே உடைத்து தகர்த்து விடும் கபிணி அணையின் மதகுகளை. அப்படி பெருநீர்வரத்தைக் கண்டு வருகிறது கபிணி அணை.

Kamal thanks Kumarasamy

கர்நாடகத்தின் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெருமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள அணைகளுக்கு அபரிமிதமான நீர்வரத்து வந்து கொண்டுள்ளது. தமிழக விவசாயிகளின் கண்ணீருக்கு இரங்கிய வரலாற்றைக் கொண்டிராத கர்நாடகம், தனது அணையின் பாதுகாப்பை கருதி நீர்வரத்து அதிகமாக இருந்ததால் உபரி நீரைத் திறந்து விடுவது வழக்கம்.

இப்போதும் கூட, இயற்கைக்குப் பயந்துதான், இன்னும் நீரைத் தேக்கி வைத்தால் அணைக்கு அபாயம் என்ற அச்சத்தில்தான் கர்நாடகா தனது அணையைத் திறந்து விட்டுள்ளதே தவிர, தமிழகத்திற்கு தண்ணீர் தர வேண்டுமே என அது திறக்கவில்லை. நிலைமை இப்படி இருக்க குமாரசாமிக்கு நன்றி தெரிவித்துள்ளார் கமல்ஹாசன்.

இதுதொடர்பாக அவர் போட்டுள்ள டிவீட்டில் கூறியிருப்பதாவது:

கர்நாடக முதல்வருடன் பேசினேன். கபிணி அணையைத் திறந்தது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தேன். காவிரி நீர் மேலாண்மை ஆணையம் வந்தாலும் கூட, இரு தரப்பு மக்களிடையே உள்ள நல்லெண்ணம் மட்டுமே பல்வேறு மதகுகளையும் திறக்க உதவும் என்பதை யாரும் மறுக்க முடியாது என்று கூறியுள்ளார் கமல்ஹாசன்.

இயற்கைக்கு நன்றி தெரிவிக்காமல், குமாரசாமிக்கு கமல்ஹாசன் நன்றி தெரிவித்திருப்பதை பலரும் கலாய்த்து வருகின்றனர். அதை விட காவிரி ஆணையம் அமைந்தாலும் கூட நல்லெண்ணத்தின் அடிப்படையில்தான் கர்நாடகம் தண்ணீர் திறக்கும் என்பதைப் போல அவர் கூறியிருப்பதும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+