அரசியல் பற்றி எதுவுமே தெரியாமல் கமல்ஹாசன் பேசி வருவதை பொருட்படுத்த தேவையில்லை: கடம்பூர் ராஜூ
அரசியல் பற்றி எதுவுமே தெரியாமல் கமல்ஹாசன் பேசி வருவதை பொருட்படுத்தத் தேவையில்லை என்று கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
சிவகாசி : கமல்ஹாசன் அரசியல் அறிவு இல்லாமல் பேசி வருகிறார். இதுபோன்று அவர் தொடர்ந்து பேசி வருவதை மக்கள் பொருட்படுத்த வேண்டியது இல்லை என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
சிவகாசியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அமைச்சர் கடம்பூர் ராஜூ பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பத்திரிகையாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார்.

பாஜக மீது நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்படும் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை அதிமுக ஆதரிக்குமா என்கிற கேள்விக்கு, அதுகுறித்து முதல்வர் மற்றும் துணைமுதல்வர், கட்சி நிர்வாகிகள் முடிவெடுப்பார்கள். அது எந்த முடிவாக இருந்தாலும் கட்சியினர் அதனை ஏற்றுக்கொள்வார்கள் என்று குறிப்பிட்டார்.
பட்ஜெட் குறித்து கமல்ஹாசன் தெரிவித்து இருக்கும் கருத்து குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதுகுறித்து அவர் கூறுகையில், கமல்ஹாசனுக்கு அரசியல் பற்றி எதுவும் தெரியாது. அவர் பேசி வருவதை எல்லாம் மக்கள் பொருட்படுத்தவேண்டிய தேவை இல்லை என்று தெரிவித்தார்.
ஆறாவது முறையாக எந்தவித வரியும் இல்லாமல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு இருப்பதற்கு நாடு முழுவதும் இருந்து பாராட்டுகள் வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்து வருவதாகவும், அதனைக் கருத்தில் கொண்டு பட்ஜெட்டில் 27 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதாகவும் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications