கம்ப ராமாயணத்தை எழுதியது சேக்கிழாரா?
தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி புதன்கிழமையன்று தஞ்சாவூரில் பேசும்போது கம்ப ராமாயணத்தை இயற்றியது சேக்கிழார் என்று குறிப்பிட்டது சமூக வலைதளங்களில் பெரும் கேலிக்கும், விமர்சனத்திற்கும் உள்ளாகிவருகிறது.
2012ஆம் ஆண்டில் நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக இருந்த எடப்பாடி கே. பழனிச்சாமி தமிழக சட்டப்பேரவையில் தன் பேச்சைத் துவக்கும்போது, "1989ல் சேவல் சின்னத்தில் எடப்பாடி தொகுதியில் நிற்கவைத்து என் அரசியல் வாழ்க்கையில் கோடு போட்டது நீங்கள்தான்; நெடுஞ்சாலைத் துறைக்கு அமைச்சராக்கி, என்னை ரோடு போடச் சொன்னதும் நீங்கள்தான்" என்று ஆரம்பித்தார்.
அப்போது அவையிலிருந்த முதலமைச்சர் ஜெயலலிதா பழனிச்சாமியின் இந்த துவக்கத்தை வெகுவாகப் பாராட்டினார்.
- காணாமல் போன நீர்மூழ்கி கப்பலை தேடுவதை கைவிட்டது அர்ஜென்டினா
- எச்.ஐ.வி தொற்றுவது குறைகிறது, சமூகப் புறக்கணிப்பு குறைந்துள்ளதா?
ஆனால், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு எடப்பாடி கே. பழனிச்சாமி முதலமைச்சரான நிலையில், அவரது உரையில் பல தவறுதலான தகவல்கள் இடம்பெறுவது பெரும் கேலிக்கும் விமர்சனத்திற்கும் உள்ளாகியிருக்கிறது.
மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா புதன்கிழமையன்று தஞ்சாவூரில் நடைபெற்றது. அங்கு பேசிய முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி, தஞ்சாவூரில் பெருமைகளைப் பற்றிப் பேசும்போது "கம்ப ராமாயணம் தந்த சேக்கிழார்" உள்ளிட்டவர்களைத் தந்த மாவட்டம் என்று குறிப்பிட்டார். மேலும் பொருளாதார மேதையும் காந்தியவாதியுமான ஜே.சி. குமரப்பாவை மகாத்மா காந்தியின் உதவியாளர் என்று குறிப்பிட்டார்.
அவரது இந்தப் பேச்சு உடனடியாக ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் பெரும் கேலிக்குள்ளானது. அவரது உரை ஊடக நிறுவனங்களுக்கு அனுப்பப்படும்போதும், அதே தவறுடன் அனுப்பப்பட்டது.
ஆனால், முதலமைச்சரின் உரையில் தவறான தகவல்கள் இடம்பெறுவது இது முதல்முறையல்ல. இதற்கு முன்பாக ராமநாதபுரம் மாவட்டத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் பேசிய முதலமைச்சர், அந்த மாவட்டத்திற்குப் பல திட்டங்களை அறிவித்தார். அதில் ஒன்றாக சாயல்குடிக்கு அருகில் குண்டாற்றில் தடுப்பணை கட்டப்படும் என்பது. சாயல் குடியிலிருந்து 8 கி.மீ. தள்ளி ஓடும் நதியில் தடுப்பணை கட்டுவதாக அறிவித்தது ஊடகங்களில் விமர்சனத்திற்குள்ளானது.
- ஆர்.கே. நகர்: மதுசூதனன் வேட்பாளர் தேர்வுக்குப் பின்னே நடந்தது என்ன?
- நேற்று அதிமுக சின்னம்; இன்று தேர்தல் தேதி: ஆணையத்தின் மீது சீறும் சமூக ஊடகம்
அதேபோல, தினத்தந்தியின் பவளவிழாவில் பிரதமர் மோதியுடன் கலந்துகொண்ட எடப்பாடி பழனிச்சாமி, North - East - South - West என்ற வார்த்தைகளின் முதல் எழுத்தைச் சேர்த்து NEWS என்ற வார்த்தை உருவானதாக குறிப்பிட்டார். பிரமதர் முன்னிலையிலான உரையே இப்படி அமைந்தது, அந்த தருணத்தில் கேலிக்குள்ளானது.
வழக்கமாக முதலமைச்சர்கள் சட்டப்பேரவையில் பேசும் உரைகள் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாலும் அரசியல் பொதுக்கூட்டங்களில் பேசும் உரைகள், அரசியல் அனுபவமுள்ளவர்களாலும் தயாரித்து அளிக்கப்படும்.
பிற செய்திகள்:
- சர்வதேச நீதிமன்றத்தில் விஷம் குடித்த முன்னாள் ராணுவத் தளபதி மரணம்
- சினிமா விமர்சனம்: திருட்டுப் பயலே-2
- கமல், ரஜினி, சீமான், ஸ்டாலின் பற்றி என்ன சொல்கிறார் பிரகாஷ் ராஜ்?
- இலங்கை கனமழையின் கோரதாண்டவம் (புகைப்படத் தொகுப்பு)
-
எடப்பாடி மீது அதிமுக எம்எல்ஏக்களுக்கு நம்பிக்கை இல்லை! எரியுதடி மாலானு ஏன் புலம்புறீங்க? தவெக பதிலடி -
"வெறும் 2 எம்எல்ஏக்கள் தான்".. யார் அவர்கள்? மதுரை உள்பட10 தென்மாவட்டங்களில் பரிதாப நிலையில் அதிமுக -
கீழ்தளத்தில் ராஜினாமா, மேல்தளத்தில் தவெகவில் இணைப்பு! குதிரை பேர கலாச்சாரம்! எடப்பாடி கண்டனம் -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி













Click it and Unblock the Notifications