சாராயம், செம்மரம், போட்டினா போட்டு தள்ளு.... 'ரத்த கச்சேரி' நடத்திய காஞ்சி ரவுடி ஸ்ரீதர் #sridhar
சென்னை: சர்வதேச போலீஸான இண்டர்போலால் தேடப்படும் குற்றவாளியான காஞ்சிபுரம் ரவுடி ஸ்ரீதர் அமலாக்கத்துறை முடக்கிய ரூ150 கோடி சொத்துகளை மீட்க எப்படியும் வெளியே வர வேண்டும் என பொறி வைத்து காத்திருக்கிறது போலீஸ்.
காஞ்சிபுரம் ஸ்ரீதர்... வடமாவட்டங்களில் சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடும் பலருக்கும் கிலி கொடுக்கும் பெயர்... 1990களில் சாராய வியாபாரி சக்கரவர்த்தியிடம் எடுபிடியாளாக சேர்ந்தவர் ஸ்ரீதர்.
ஒருகட்டத்தில் சக்கரவர்த்தியின் மகளையே திருமணம் செய்து கொண்டு சாராய தொழிலில் கோலோச்சினார்.. பின்னர் ரியல் எஸ்டேட் தொழிலில் களமிறங்கினார்.. அடுத்ததாக செம்மரக் கட்டை கடத்தல்...

போட்டு தள்ளு
இந்த தொழில்களில் போட்டியாக யார் வந்தாலும் போட்டுத் தள்ளுவதை சர்வசாதாரணமாக செய்து வந்தார் ஸ்ரீதர். சிறைக்குப் போனாலும் தன்னுடைய தொழிலில் அசால்ட்டு காட்டினார்..

என்கவுண்ட்டர் எஸ்கேப்
என்கவுண்ட்டரில் போலீஸ் முடித்துவிட எண்ணிய போது லாவகமாக ஏர்போர்ட்டுக்குள் நுழைந்து மத்திய பாதுகாப்பு படையிடம் ப்ளான் பண்ணி சிக்கினார்.

துபாயில்...
சட்டவிரோத காரியங்களுடன் சொத்துகளை கூலிப்படை மூலம் அபகரிப்பது என அடுத்தடுத்து ஸ்ரீதரின் குற்றங்கள் அதிகரித்து கொண்டே இருந்தன. ஒருகட்டத்தில் நாட்டைவிட்டு எஸ்கேப்பாகி துபாயில் போய் செட்டிலாகிவிட்டதாக கூறப்படுகிறது. அங்கிருந்தபடியே சாம்ராஜ்யத்தை நடத்தி வந்திருக்கிறார் ஸ்ரீதர்.

இண்டர்போல்
இப்போதும் இண்டர்போல் ஸ்ரீதரை தேடப்படும் குற்றவாளியாகத்தான் தம்முடைய பட்டியலில் வைத்திருக்கிறது. அண்மையில் ஸ்ரீதரின் மகளை போலீஸ் கைது செய்து பாஸ்போர்ட்டை முடக்கியது. ஆனால் தந்தையுடன் தனக்கே தொடர்பு இல்லை என ஒரே போடாக போட்டு எஸ்கேப்பாகிவிட்டார்.

இத்தனை கேஸ்கள்....
ஸ்ரீதர் மீது இதுவரை 5 கொலை, 8 கொலை முயற்சி, 4 ஆள் கடத்தல், கட்டப்பஞ்சாயத்து, நில உரிமையாளர்களை மிரட்டுதல், அடிதடி, செம்மரம் கடத்தல் உட்பட 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. 5 முறை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெளியே வர வைக்க..
தற்போது ஸ்ரீதரின் எடுபிடிகளை தீவிரமாக போலீசார் கண்காணித்து வருகின்றனர். ஸ்ரீதரை எப்படியும் வெளியே வரவைக்கவே அமலாக்கத்துறை மூலம் ரூ150 கோடி சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. எப்படியும் சொத்துகளை ஸ்ரீதர் வந்தாக வேண்டும்.. அப்போது இருக்கிறது அவரின் 'ரத்த கச்சேரிகளுக்கான' பதில் கச்சேரி என்கின்றனர் போலீஸ் அதிகாரிகள்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications