For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

போங்க, வீட்டுக்குப் போய் சாப்ட்டு வாங்க.. தொண்டர்களுக்கு கனிமொழி கோரிக்கை

திமுக தலைவர் கருணாநிதி நன்றாக உள்ளார், தொண்டர்கள் யாரும் இங்கே இருக்க வேண்டாம் என்று கனிமொழி திமுக தொண்டர்களுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    வீட்டுக்குப் போய் சாப்ட்டு வாங்க..தொண்டர்களுக்கு கனிமொழி கோரிக்கை- வீடியோ

    சென்னை: திமுக தலைவர் கருணாநிதி நன்றாக உள்ளார், தொண்டர்கள் யாரும் இங்கே இருக்க வேண்டாம் என்று கனிமொழி திமுக தொண்டர்களுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

    திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை தற்போது சீராகி வருகிறது. காவேரி மருத்துவமனையில் திமுக தலைவர் கருணாநிதிக்கு 3வது நாளாக தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தீவிர சிகிச்சைகளுக்கு பின் கருணாநிதியின் உடல்நிலை தற்போது இயல்புநிலையை அடைந்துள்ளது.

    Kanimozhi asks DMK cadres to go home and eat

    ஆனாலும் மருத்துவமனை முன் தொடர்ந்து தொண்டர்கள் கூடி வருகிறார்கள். இதனால் அங்கு பரபரப்பு நிலவுகிறது. இந்த நிலையில் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை பற்றி கனிமொழி பேட்டியளித்துள்ளார்.

    அதில், திமுக தலைவர் கருணாநிதி நன்றாக உள்ளார். தொண்டர்கள் தைரியமாக இருக்கவும். தொண்டர்கள் யாரும் இங்கே இருக்க வேண்டாம்.

    தொண்டர்கள் வீட்டிற்கு செல்லுங்கள். வீட்டிற்கு சென்று கொஞ்சம் ஓய்வெடுங்கள். வீட்டிற்கு சென்று உணவருந்திவிட்டு வாருங்கள் என்று கனிமொழி தொண்டர்களுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

    English summary
    Kanimozhi asks DMK cadres to go home and eat saying that DMK leader Karunanidhi is in good health.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X