ஆர்.கே.நகரில் பிரசாரம்... கனிமொழிக்கு திடீரென அனுமதி கொடுத்த ஸ்டாலின்!
ஆர்.கே. நகர் தொகுதியில் நாடார் வாக்குகளை அள்ளுவதற்காக கனிமொழி பிரசாரம் செய்ய ஒப்புக் கொண்டுள்ளாராம் ஸ்டாலின்.
சென்னை: ஆர்.கே.நகர் தொகுதியில் நாடார் வாக்குகளை அள்ளுவதற்காக திமுக ராஜ்யசபா எம்.பி. கனிமொழியை களமிறக்க அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஒப்புக் கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஆர்.கே. நகர் தொகுதி இடைத் தேர்தலில் திமுகவை வெற்றி பெற செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் மு.க. ஸ்டாலின். அதிமுக சிதறிய நிலையில் எளிதாக வெல்ல வேண்டிய கட்டயாம் ஸ்டாலினுக்கு இருக்கிறது.
தமிழகம் முழுவதும் திமுக மாவட்ட செயலாளர்களை ஆர்.கே.நகரில் களமிறக்கியுள்ளார் ஸ்டாலின். தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்தும் திமுக நிர்வாகிகள் ஆர்.கே.நகரில் முகாமிட்டு தேர்தல் பணியாற்றி வருகின்றனர்.

கனிமொழிக்கு ஆதரவு
இத்தொகுதியில் 45,000 நாடார் சமூக வாக்குகள் உள்ளன. இந்த வாக்குகளைப் பெறுவதற்காக கனிமொழியை ஸ்டாலின் களமிறக்க வேண்டும் என்பது திமுகவினரின் கோரிக்கையாக இருந்து வந்தது.

தனித்தே வாங்க முடியும்
ஆனால் கனிமொழி வந்துதான் நாடார் ஓட்டுகளை வாங்க வேண்டும் என்பதில்லை... தென்மாவட்ட நாடார் சமூக தலைவர்களை வைத்து வாங்குகிறேன் என கங்கணம் கட்டிக் கொண்டிருந்தார் ஸ்டாலின். இது தொடர்பாக நமது ஒன் இந்தியா தமிழ் இணையதளத்திலும் செய்தி வெளியிட்டிருந்தோம்.

திடீர் ஒப்புதல்
இந்த நிலையில் திடீரென கனிமொழி பிரசாரம் செய்ய ஸ்டாலின் ஒப்புதல் தெரிவித்துள்ளாராம். தற்போது டெல்லியில் முகாமிட்டுள்ள கனிமொழிக்கு இத்தகவல் தெரிவிக்கப்பட்டது.

விரைவில் பிரசாரம்
இதையடுத்து கடைசிநேர பிரசாரம் மேற்கொள்ளும் வகையில் தமது பயண திட்டத்தை கனிமொழி வகுக்க உத்தரவிட்டுள்ளாராம். இதனால் ஆர்கே நகரில் கனிமொழி விரைவில் தேர்தல் பிரசாரம் செய்வார் என்கின்றன திமுக வட்டாரங்கள்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications