அண்ணன் ஸ்டாலினை ஆரத்தழுவி மகிழ்ச்சியை வெளிப்படுத்திய கனிமொழி!
2ஜி வழக்கிலிருந்து கனிமொழி விடுவிக்கப்பட்டதை தொடர்ந்து, அண்ணன் ஸ்டாலினை விமான நிலையத்தில் ஆரத்தழுவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் கனிமொழி.
சென்னை: 2ஜி வழக்கிலிருந்து கனிமொழி விடுவிக்கப்பட்டதை தொடர்ந்து அவரை வரவேற்க சென்னை விமான நிலையத்துக்கு வந்த கனிமொழியை மு.க.ஸ்டாலின் சந்தித்தபோது அவர் ஆரத்தழுவி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
முந்தைய காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு 2ஜி
அலைக்கற்றை ஒதுக்கி வழங்கியதில் ரூ.1.76 லட்சம் கோடி முறைகேடு நடந்துள்ளதாக முன்னாள் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா, தி.மு.க. எம்.பி. கனிமொழி ஆகியோரது மீது குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த வழக்கின் தீர்ப்பு கடந்த வியாழக்கிழமை வந்தது. அதில் குற்றம்சாட்டப்பட்ட 14 பேரும் விடுவிக்கப்பட்டனர்.

பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும்...
இதையடுத்து திமுகவினர் டெல்லியில் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் மகிழ்ச்சியை கொண்டாடினர். திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலினும் ஆழ்வார்பேட்டையில் உள்ள வீட்டில் அனைவருக்கும் இனிப்பு வழங்கினார்.

அநீதி வீழும்
2ஜி வழக்கிலிருந்து கனிமொழி விடுவிக்கப்பட்டதை அறிந்த கருணாநிதி அநீதி வீழும், அறம் வெல்லும் என்ற வாசகத்தை எழுதி காண்பித்துள்ளார். பின்னர் தொலைபேசியிலும் கருணாநிதியுடன் பேசி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் கனிமொழி.

சென்னை விமான நிலையத்தில்...
2ஜி வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டதை தொடர்ந்து டெல்லியிலிருந்து கனிமொழியும், ஆ.ராசாவும் இன்று சென்னை வந்தனர். அதற்கு முன்னதாக அவர்களை வரவேற்க திமுகவினர் விமான நிலையத்தில் குவிந்தனர்.

கனிமொழி மகிழ்ச்சி
இதையடுத்து சென்னை விமான நிலையத்துக்கு சென்ற ஸ்டாலின், கனிமொழிக்கு பொன்னாடை போர்த்தி வரவேற்றார். அப்போது ஸ்டாலினை கனிமொழி ஆரத்தழுவினார். இதையடுத்து ஆ.ராசாவும் மகிழ்ச்சியில் ஸ்டாலின் கட்டித் தழுவினார். இதையடுத்து கோபாலபுரத்தில் உள்ள திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து இருவரும் ஆசி வாங்கினர்.

கனிமொழி வீடு
கருணாநிதியை சந்தித்து விட்டு சிஐடி காலனியில் உள்ள தனது வீட்டுக்கு கனிமொழி வந்தார். அப்போது அங்கு திரண்டிருந்த தொண்டர்கள் அக்கா கனிமொழி வாழ்த்து கோஷங்களை எழுப்பினர். மகிழ்ச்சியை கொண்டாடும் வகையில் கோபாலபுரத்தில் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications