வைரமுத்து, கனிமொழி வாயில் சனி.. திமுக ஆட்சிக்கு வர வாய்ப்பில்லை - எஸ்.வி சேகர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: வைரமுத்து, கனிமொழி ஆகியோரின் மூளையிலும், நாக்கிலும் சனி அமர்ந்துள்ளது என எஸ்.வி சேகர் டிவிட் செய்து இருக்கிறார்.

ஸ்ரீவில்லிப்புத்தூரில் ஆண்டாள் குறித்த கருத்தரங்கம் சில நாட்களுக்கு முன் நடைபெற்றது. இதில் பேசிய வைரமுத்து ஆண்டாள் வாழ்ந்த காலம், தெய்வம் மற்றும் அவரின் பிறப்பு குறித்து தவறுதலாக விளக்கியதாக கூறப்படுகிறது. வைரமுத்து பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

Kanimozhi & Viramuthu are the problem for DMK - S.Ve.Shekher

தற்போது பாஜக கட்சியில் தீவிரமாக செயல்பட்டு வரும் நடிகர் எஸ்வி சேகர் இதற்கு பதில் அளித்து இருக்கிறார். மேலும் அவர் கி. வீரமணி மற்றும் கனிமொழி குறித்தும் டிவிட் செய்துள்ளார்.

அதில் ''மூளையிலும், நாக்கிலும் சனி அமர்ந்துள்ள வைரமுத்து, கனிமொழி இருவர் மூலமாக ஆண்டாள் அருளால் இனி திமுக ஆட்சிக்கு வர வாய்ப்பில்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. விரைவில் வீரமணி நாவின் மீது அமர்ந்திருக்கும் சனி மூலமாக உறுதி செய்யப்படும்.'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

இந்த டிவிட்டோடு இவர் ஆண்டாள் புகைப்படம் ஒன்றையும் பகிர்ந்து இருக்கிறார். வைரமுத்து தன் பேச்சிற்கு ஏற்கனவே மன்னிப்பு கேட்டுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
S.Ve.Shekher tweets that ''Kanimozhi & Viramuthu are the problem for DMK. He added that Due to their irrelevant speech DMK won't come back to power.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற