கப்பல்கள் மோதி சென்னை கடலில் எண்ணெய் பரவி அபாயம்.. மத்திய அரசு தலையிட கனிமொழி கோரிக்கை
சென்னை: எண்ணூர் காமராஜர் துறைமுகம் அருகில் இரண்டு கப்பல்கள் மோதிக் கொண்டன. அப்போது கப்பலில் கொண்டு வரப்பட்ட கச்சா எண்ணெய் கடலில் கொட்டியது. மத்திய அரசு இதில் தலையிட்டு எண்ணெய்யை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராஜ்ய சபா எம்பி கனிமொழி கப்பல் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

கனிமொழி எழுதியுள்ள கடிதத்தில், ஜனவரி 29ம் தேதி எண்ணூர் காமராஜர் துறைமுகம் அருகில் நடந்த விபத்தில் எண்ணெய் கொட்டி கடல் முழுவதும் பரவி வருகிறது. இதனால் சென்னையில் 24 கி.மீ தொலைவிற்கு எண்ணெய் பரவி கடல் மாசடைந்துள்ளது. இதனால் கடல் வாழ் உயிரினங்கள், ஆமைகள், மீன் இனங்கள் உயிரிழந்துள்ளன. மேலும், அப்பகுதி முற்றுலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம், அவர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு ஆகியவை குறித்து பெரும் கவலை ஏற்பட்டுள்ளது.
கப்பல்கள் மோதி சென்னை கடலில் எண்ணெய் பரவி அபாயம்.. மத்திய அரசு தலையிட கனிமொழி கோரிக்கை pic.twitter.com/smYDRQZytE
— Oneindia Tamil (@thatsTamil) February 1, 2017
கடலில் பரவியுள்ள எண்ணெய் கழிவை யார் அகற்றுவது என்ற குழப்பமும் இங்கு நிலவி வருகிறது. இதுதவிர, உரிய பயிற்சி பெறாத அப்பகுதி மக்களும், மீனவர்களும் எண்ணெய்யை அகற்றும் பணியை செய்து வருகிறார்கள். மேலும் அதற்கான உரிய நவீன இயந்திரங்களும் இல்லை. எனவே, மத்திய அரசு இதில் உடனடியாக தலையிட்டு எண்ணெய்யை அகற்றும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், இந்த கப்பல் விபத்து நடைபெற்றது தொடர்பாக விசாரிக்க வேண்டும் என்றும், எதிர்காலத்தில் இதுபோன்ற விபத்துக்கள் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கனி மொழி கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
-
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications