கனிஷ்க் நிறுவனத்தின் ரூ. 48 கோடி சொத்துகள் முடக்கம்
கனிஷ்க் நிறுவனத்தின் ரூ. 48 கோடி சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கம் செய்தது.
சென்னை: கனிஷ்க் நிறுவனத்துக்கு சொந்தமான ரூ.48 கோடி சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கம் செய்தது.
சென்னை வடக்கு உஸ்மான் சாலையில் உள்ளது கனிஷ்க் நகைக் கடை. இந்த நிறுவனம் கடந்த 2007-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு பெரிய பெரிய நகைக் கடைகளுக்கு நகைகளை சப்ளை செய்து வந்தது.

இந்த நிறுவனத்தின் உரிமையாளர் பூபேஷ் குமார் ஜெயின் 14 வங்கிகளில் ரூ.824 கோடி கடன் வாங்கிக் கொண்டு ஏமாற்றிவிட்டதாக சிபிஐக்கு எஸ்பிஐ வங்கி புகார் கடிதம் அனுப்பியது.
முதலில் பாரத ஸ்டேட் வங்கியில் வங்கிக் கணக்கை தொடங்கி இந்த வங்கியில் இவர்கள் பெற்ற கடனை வருமானமாக கொண்டு 14 வங்கிகளில் கடன் பெற்றுள்ளனர். இதுபோல் 824 கோடி ரூபாய் கடன் பெற்றனர்.
இந்த கடனுக்கான வட்டித் தொகையானது சுமார் ரூ.160 கோடி ஆகும். ஆனால் இவர்கள் பெற்ற கடனுக்காக வங்கி சார்பில் நோட்டீஸ் அனுப்பியபோதும் எவ்வித பதிலையும் கொடுக்கவில்லை. இதையடுத்து அந்த நிறுவனத்தின் உரிமையாளர் பூபேஷ்குமார் ஜெயின், அவரது மனைவி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இது தொடர்பாக சிபிஐயும் அமலாக்கத் துறையும் விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் காஞ்சிபுரத்தில் புக்கத்துறையில் உள்ள கனிஷ்க் நிறுவனத்தின் ரூ.48 கோடி சொத்தை அமலாக்கத் துறை முடக்கியது.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications