கன்னியாகுமரியில் மாயமான பள்ளி மாணவி ஆசிரமக் கிணற்றில் பிணமாக மிதந்தார்
ஆரல்வாய்மொழி: கன்னியாகுமரியில் மாயமான பள்ளி மாணவி ஆசிரமக் கிணற்றில் பிணமாக மிதந்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
அஞ்சுகிராமத்தை அடுத்த மேட்டுக்குடியிருப்பு காலனியைச் சேர்ந்தவர் துரை. வெளிநாட்டில் வேலை பார்த்து வருவதாக கூறப்படுகிறது. இவரது மனைவி சாந்தி. இவர்களின் மகள் சுபா.
கன்னியாகுமரி பகுதியில் உள்ள பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வந்தார். இதற்காக அப்பகுதியில் உள்ள ஒரு ஆசிரமத்தில் தங்கி இருந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆசிரம நிர்வாகிகளுடன் பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் பெற்றோர் இவரை ஆரல்வாய்மொழி அருகே சுப்பிரமணியபுரத்தில் சுகுமாரன் என்பவர் நடத்தி வரும் ஆசிரமத்தில் சேர்த்தனர். அங்கிருந்தபடி பெருமாள் புரத்தில் உள்ள பள்ளியில் படித்து வந்தார். தினமும் காலையில் பள்ளிக்கு சென்று விட்டு மாலையில் ஆசிரமம் திரும்பி விடுவது வழக்கமாம். இந்த நிலையில் அவர் மாலை வரை அறைக்கு திரும்பவில்லை.
இதையறிந்து ஆசிரம நிர்வாகி பதறியபடி ஆசிரம வளாகம் மற்றும் கிணற்றங்கரையிலும் சுபாவை தேடினார். இதுபற்றி உடனடியாக சுபாவின் தாயார் சாந்திக்கு தகவல் கொடுத்தார். அவர் மூலம் ஆரல்வாய்மொழி போலீசிலும் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆசிரமத்திற்கு சென்று விசாரித்தனர்.
இந்த நிலையில் ஆசிரமத்தின் பின் பகுதி வழியாக கிராம மக்கள் சிலர் விவசாய வேலைக்கு சென்றனர். அவர்கள் ஆசிரம கிணற்றில் தண்ணீர் எடுக்க முயன்றபோது, அங்கு ஒரு பெண் பிணம் கிடப்பதை கண்டு அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். இதுபற்றி ஆரல்வாய்மொழி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
போலீசார் விரைந்து சென்று தீயணைப்பு வீரர்கள் துணையுடன் கிணற்றில் கிடந்த பிணத்தை மீட்டபோது அது மாணவி சுபாவின் உடல் என தெரிய வந்தது. ஆசிரமத்தில் மாயமான மாணவி கிணற்றில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர் காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் பிரச்சனையா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications