குமரி கடலில் சீற்றம்.. 30 அடி உயரத்துக்கு எழும்பும் அலை.. மீனவ மக்கள் அச்சம்
கன்னியாகுமரி கடலில் 30 அடி உயரத்துக்கு கடலலை எழும்பி வருகிறது.
கன்னியாகுமரி: குமரி கடலில் 30 அடி உயரத்திற்கும் மேல் கடலலை எழும்பி அம்மாவட்ட மக்களை பயமுறுத்தி வருகிறது.
தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் கடல் சீற்றமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பினை வெளியிட்டு மீனவ பகுதி மக்களை எச்சரித்திருந்தது. அதன்படி, வள்ளவிளை, மார்த்தாண்டம் துறை, நீரோடி உள்ளிட்ட மீனவ பகுதிகளில் 35 அடிவரை அலைகள் எழும்பி வருகிறது.

இவ்வாறு கடலலை எழும்புவதால் தங்கள் வீடுகளுக்குள் கடல்நீர் உட்புகுந்துவிடுமோ என மீனவ மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். கடல் சீற்றம் அதிகமாக உள்ள காரணத்தினால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. அதனால் இரயுமன்துறை முதல் நீரோடி வரை மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் தங்களது படகுகளை கரையோரங்களில் கட்டி வைத்துள்ளனர்.
வள்ளவிளை, மார்த்தாண்டம் துறை, நீரோடி பகுதிகளிலுள்ள வீடுகளுக்குள்ளும் கடல் நீர் உட்புகா வண்ணம் தூண்டில் வளைவு அமைத்துத் தர வேண்டும் என மீனவ மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த 3 பகுதிகளுக்கும் தூண்டில் வளைவுகள் அமைக்கும் பணிகளுக்காக தமிழக அரசு 116 கோடி ரூபாய் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications