ஓகி புயல் தாக்கம்- குமரியில் பலத்த காற்று- மின்சாரம் துண்டிப்பு: பொதுமக்களுக்கு ஆட்சியர் எச்சரிக்கை
கன்னியாகுமரியில் பலத்த காற்று வீசுவதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Recommended Video

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் பலத்த காற்று வீசுவதால் மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருவெடுக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. தற்போது குமரிக்கு தென்கிழக்கே 170 கி.மீ., காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 12 மணி நேரத்தில் புயலாக மாறும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்தப் புயலுக்கு ஓகி என்று பெயர் வைக்கப்பட்டு உள்ளது. இதனால் கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான காற்றும், கனமழையும் நிலவி வருகிறது.
கனமழையோடு காற்று வீசுவதால் திருவனந்தபுரம் - நாகர்கோவில் இடையே ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளது. மாவட்டம் முழுவதும் சூறைக்காற்றோடு பலத்த மழை பெய்து வருகிறது. பல பகுதிகளில் மரங்கள் சாய்ந்துள்ளன.
#Cyclone #Kanyakumari
— Fathima (@tweety_aysshh) November 30, 2017
Stay indoors and be safe 🙏 pic.twitter.com/Jkr5j251Je
இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் காற்றின் வேகம் பல மடங்கு அதிகமாகி இருப்பதால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன் சிங் சவுகான் அறிவுறுத்தி உள்ளார்.












Click it and Unblock the Notifications