மீனவர்களை மீட்டுத்தாங்க.. கொட்டும் மழையிலும் குமரி மாவட்டத்தில் மக்கள் ரயில் மறியல்
கன்னியாகுமரியில் உள்ள குழித்துறையில் மீனவர்களின் உறவினர்கள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Recommended Video

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓகி புயல் தாக்கியபோது காணாமல் போன மீனவர்களை உடனடியாக கண்டுபிடித்துத் தர வேண்டும் என்று கோரி குழித்துறையில் அவர்களது உறவினர்கள் கொட்டும் மழையிலும் 5 மணி நேரத்துக்கு மேலாக ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த 30-ஆம் தேதி வங்கக் கடலில் ஓகி புயல் உருவானது. இதனால் தென் தமிழகமும், கேரள மாநிலத்தின் ஒரு சில பகுதிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டன.
ஓகி புயல் வருவதற்கு நீண்ட நாள்களுக்கு முன்பே ஆழ் கடலில் தங்கி மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் வெளியேற முடியாமல் தத்தளித்தனர். சிலரை காணவில்லை. இன்னும் சிலர் குஜராத், லட்சதீவு உள்ளிட்ட பகுதிகளில் கரை ஒதுங்கினர்.

மீனவர்கள் போராட்டம்
இவர்களை மீட்க இந்திய கடலோர காவல் படையும், விமான படையும், கடற்படையும் நடவடிக்கை எடுத்து வருகின்றன. இந்நிலையில் மீனவர்களை மீட்கக் கோரி கன்னியாகுமரியில் மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

8 மீனவ கிராமங்கள் போராட்டம்
இந்நிலையில் மீனவர்கள் காணாமல் போய் 7 நாள்கள் ஆகியும் இதுவரை கண்டுபிடிக்கப்படாதததற்கு உறவினர்கள் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து சின்னத்துறை கிராமத்திலிருந்து 5 கி.மீ.தூரத்துக்கு சின்னத்துறை, நீரோடி ஆகிய 8 மீனவ கிராமத்தினர் பேரணியாக வந்தனர்.

ரயில் மறியல் போராட்டம்
முதலில் 1000 பேருடன் தொடங்கிய இந்த பேரணியில் பின்னர் வழிநெடுகிலும் மக்கள் இணைந்து கொண்டனர். குழித்துறையில் உள்ள ரயில் நிலையத்தில் 5000-க்கும் மேற்பட்டோர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நெல்லை சரக டிஐஜி பேச்சுவார்த்தை
பல மணி நேரத்துக்கும் மேலாக ரயில் மறியல் போராட்டம் நடைபெறுவதால் நாகர்கோவில்- திருவனந்தபுரம் இடையே ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே போராட்டக்காரர்களிடம் நெல்லை சரக டிஐஜி கபில் பேச்சுவார்த்தை நடத்தினார். பத்மநாபபுரம் வருவாய் கோட்டாட்சியர் ராஜகோபாலும் பேச்சுவார்த்தையில் பங்கேற்றார். ஆனால் மக்களோ போராட்டத்தை பின்வாங்காமல் கொட்டும் மழையையும் பொருட்டுப்படுத்தாமல் 5 மணி நேரத்துக்கும் மேலாக போராடி வருகின்றனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications